தமிழ்நாடு பாஜகவின் மாநில பொதுச்செயலாளராக இருந்த கே.டி. ராகவன் தொடர்பான வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி இருந்தது. பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த வீடியோ தொடர்பாக கே.டி. ராகவன் தன்னுடைய ஃபேஸ்புக்கில் விளக்கமளித்துள்ளார். இந்நிலையில், இதுதொடர்பாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "இந்த விவகாரம் உயர் தொழில்நுட்பத்தில் தனக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டிருக்கும் சதி, இதைத் தான் சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள தயாராக இருப்பதாக கே.டி. ராகவன் என்னிடம் தெரிவித்துள்ளார். இதில் இருந்து அவர் சட்டப்பூர்வமாக வெளிவருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவரின் ராஜிநாமா ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது" என அந்த அறிக்கையில் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தன் மீதான குற்றச்சாட்டுகளை கே.டி. ராகவன் சட்ட ரீதியாக எதிர்கொண்டு நிரூபிப்பார் - அண்ணாமலை அறிக்கை!
Advertisment
Advertisment
Follow Us