Published on 14/06/2022 | Edited on 14/06/2022

கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து தொகுப்பு ஒப்பந்தம் ஸ்ரீ பாலாஜி சர்ஜிக்கல் என்ற நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை புகார் கூறிய அனிதா டெக்ஸ்காட் நிறுவனத்திற்கு வழங்கப்படவில்லை. கடந்த 2019- ஆம் ஆண்டைக் காட்டிலும் குறைவான தொகைக்கு டெண்டர் இறுதி செய்யப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து பெட்டகம் குறித்து காழ்ப்புணர்ச்சியுடன் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். அண்ணாமலை கூறிய அனிதா டெக்ஸ்காட் நிறுவனத்திற்கு டெண்டர் தரப்படவில்லை. நியாயமான முறையில் அண்ணாமலை வருத்தம் தெரிவிக்க வேண்டும். அண்ணாமலை வருத்தம் தெரிவிக்கவில்லை என்றால், துறை ரீதியில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.