Annamalai said that PM modi is maintaining the cleanliness of the country

Advertisment

பாஜக மாநில செயற்குழு கூட்டம் திருச்சி பால்பண்ணை பகுதியில் செவ்வாய்க்கிழமை(2.1.2024) இரவு நடைபெற்றது. கூட்டத்துக்கு பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை தலைமை வகித்தார். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மாநில இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச். ராஜா, காந்தி, நயினார் நாகேந்திரன், மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள், பல்வேறு அணிகளைச் சேர்ந்த தலைவர்கள் என 150 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை பேசுகையில், “பிரதமர், ஆண்டின் முதல் விழா தமிழகத்தில்தான் நடைபெற வேண்டும் என உறுதியாகக் கூறினார். அவர் கூறியதை போலவே, தற்போது திருச்சியில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றார்.திருச்சிக்கு வருகை தந்த பிரதமர், என்னிடம் எவ்வளவு குப்பைகளை அகற்றினீர்கள் எனக் கேட்டார். அதற்கு நான், 7 டன் குப்பைகளை அகற்றினோம் எனக் கூறினேன். அந்த அளவுக்கு அவர், நாட்டின் தூய்மையைப் பேணி வருகிறார். பிரதமர் எந்த ஊர் சென்றாலும், அங்கு குப்பைகளை அகற்றி நாம் அவரை வரவேற்க வேண்டும்” என்றார்.