Annamalai said If BJP comes power there will be no Hindu Religious Charities

Advertisment

தமிழ்நாட்டில் கோயில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதை தடுக்கக் கோரியும், அரசின் இந்து சமய அறநிலையத்துறையைக் கண்டித்தும் தமிழக பாஜகவினர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று நடத்தினர். இதில் மாநில துணைத் தலைவர்கள் கரு. நாகராஜன், வி.பி. துரைசாமி, மாவட்டத் தலைவர்கள் மற்றும் எச். ராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு பழச்சாறு கொடுத்து போராட்டத்தை முடித்து வைத்த அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, “பக்தர்கள் காணிக்கையாக போடும் உண்டியல் பணத்தை எடுத்து அதிகாரிகளின் உணவு செலவுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இதேபோல்பல்வேறு பணிகளுக்கு அரசு செலவு செய்யாமல்கோயில் உண்டியல் பணத்தை எடுத்து செலவு செய்துள்ளனர்.

கோயில் பணம் சரியாக செலவு செய்யப்படுகிறதா என்பதற்காக தணிக்கை செய்யப்படுகிறது. ஆனால், தணிக்கை செய்வதற்கான செலவையே அதிகமாக பெற்றுள்ளனர்.தமிழக அரசு தணிக்கை செலவு என கோயில்களிலிருந்து 2018-19 ஆண்டில் ரூ.92 கோடி, 2019-20 ஆண்டில் ரூ.87 கோடி, 2020-21 ஆண்டில் ரூ.70 கோடி பெற்றுள்ளது. தணிக்கைக்கு உண்டான செலவை விட 4 மடங்கு அதிகமான பணத்தை கோயில்களிலிருந்து எடுத்துள்ளனர்.

Advertisment

தமிழகத்திற்கு தேவையில்லாத ஒரு துறையாக இந்து சமய அறநிலையத்துறை இருக்கிறது. தமிழக கோயில்களிலிருந்து ரூ.1,000 கோடிக்கு மேல் வருமானம் கிடைக்கும். ஆனால், அதனை மறைத்து தமிழக அரசு வெறும் ரூ.100 கோடி அளவில்தான் கணக்கு காட்டுகிறது. இதற்கு ஒரே முடிவு கோயில்களின் நிர்வாகத்திலிருந்து அரசு வெளியேற வேண்டும். பாஜக தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால்தமிழகத்துக்கு இந்து சமய அறநிலையத்துறை தேவையில்லை என்பது எங்களது முதல் கையெழுத்தாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.