Advertisment

சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 65வது நினைவுநாளையொட்டி அம்பேத்கர் சிலைக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை செய்துவருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள அம்பேத்கர் சிலையின் கீழ் வைக்கப்பட்டுள்ள அவரின் உருவப்படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செய்தார்.