/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/19_128.jpg)
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் கஞ்சா விற்பனையும் கஞ்சா கடத்தலையும் தடுக்கும் பொருட்டு தீவிர தேடுதல் வேட்டையில் மாவட்ட காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சிதம்பரம் அருகே அண்ணாமலை நகர் சிவபுரி சாலை சுடுகாடு அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக அண்ணாமலை நகர் காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அண்ணாமலை நகர் காவல் ஆய்வாளர் அம்பேத்கர் தலைமையிலான காவல்துறையினர் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று சுமார் 1.1/4 கிலோ கஞ்சா பொட்டலங்களைப் பறிமுதல் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து கஞ்சா வைத்திருந்ததற்காக பசுபதி(24), லாரன்ஸ்(21), அஜய்(19) ஆகியோரை கைது செய்த போலிசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக இருந்தது என்பதை கண்டுபிடித்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)