Advertisment

இன்று (28.01.2022) பாரதிய ஜனதா கட்சி சார்பில் திநகரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடந்தது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், பாஜக அகில இந்திய மகளிர் அணி தலைவி வானதி ஸ்ரீனிவாசன், தமிழக பாஜக பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, சி.பி ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் உடனிருந்தனர்.