
தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் பொதுச்செயலாளரான கே.டி. ராகவன் தொடர்பான ஓர் ஆபாச வீடியோ சமூகவலைத்தளத்தில் வெளியானது. இதனைத் தொடர்ந்து ராகவன், தனது கட்சி பொறுப்புகளிலிருந்து விலகுவதாக ட்விட்டரில் அறிவித்தார். வீடியோ வெளியான 24ஆம் தேதியே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த சம்பவத்தில் இதேபோல்இன்னும் பலருடைய வீடியோக்கள்இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.
வெளியான ஆபாச வீடியோ தொடர்பாக பல சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், பாஜக நிர்வாகிகளுடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நாளை முதல் 3 நாட்கள் தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாஜகவின் அனைத்து அணிகள் மற்றும் பிரிவு நிர்வாகிகள் உடன் அண்ணாமலைஆலோசிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Follow Us