அண்மையில் பா.ஜ.கவில் இணைந்த முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலைக்கு மாநிலத் துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
அண்மையில் டெல்லியில் பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார் அண்ணாமலை ஐ.பி.எஸ். இந்நிலையில் தமிழக பா.ஜ.க துணைத் தலைவராகஅவர்நியமிக்கப்பட்டுள்ளதாக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். தங்களுடைய பணி சிறக்க வாழ்த்துகள்என அண்ணாமலைக்கு பா.ஜ.க தலைவர் முருகன்வாழ்த்துத்தெரிவித்துள்ளார்.
கட்சியில் சேர்ந்த நான்கே நாட்களில்முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலைக்குமாநில துணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.