Advertisment

பா.ஜ.க.வின் அமர் பிரசாத் ரெட்டி கைது

nn

பா.ஜ.க. பிரமுகரானஅமர் பிரசாத் ரெட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

சென்னை பனையூரில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் வீட்டின் முன்பு 100 அடி உயரம் கொண்ட பா.ஜ.க. கட்சியின் கொடிக் கம்பம் நிறுவப்பட இருந்தது. அனுமதியின்றி அக்கொடி கம்பம் வைக்கப்பட்டதாக புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து அரசு ஊழியர்கள் அந்த கொடிக்கம்பத்தை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனர். கொடிக்கம்பத்தை அகற்றுவதற்காக ஜே.சி.பி. வாகனம் கொண்டுவரப்பட்டது. அப்பொழுது அங்கு கூடியிருந்த பா.ஜ.க.வினர் ஜே.சி.பி. வாகனத்தை சேதப்படுத்த முயன்றனர். இந்த சம்பவத்தில் ஏற்கனவே பா.ஜ.க.வினர் 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

Advertisment

இந்நிலையில் அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், தாக்கியதாகவும், பொதுசொத்துக்களை சேதப்படுத்தியதாகவும் அண்ணாமலையின் நண்பர் அமர் பிரசாத் ரெட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அவரை தாம்பரம் நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தபோலீசார் அழைத்துச் சென்றுள்ளதாகதகவல் வெளியாகியுள்ளது.

Annamalai police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe