Advertisment

அவதூறு பரப்பும் மலிவான அரசியல் செய்யும் அண்ணாமலை!- துரை வைகோ சுளீர்!

Annamalai is a cheap political place that spreads slander! - Durai Vaiko Sulir!

Advertisment

கடந்த மே 6- ஆம் தேதி, விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம்- ஓ.மேட்டுப்பட்டி அருகே, எஸ்.ஆர். நாயுடு கல்லூரி வாகனம் விபத்துக்குள்ளாகி, பயணம் செய்த 60 மாணவியர்களில் 26 பேர் காயமடைந்தனர். அவர்களில் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி கௌரியைச் சந்தித்து ஆறுதல் கூறினார், மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ. அங்கு செய்தியாளர்களின் கேள்விகளை எதிர்கொண்டு பேட்டியளித்தார்.

பிரதமரின் திட்டங்களில் முறைகேடு நடக்கிறது. அதனால், ஒவ்வொரு தாலுகாவிலும் பா.ஜ.க. சார்பில் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படும் என பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறாரே?

குறைகளை அரசு நிவர்த்தி செய்து வருகிறது. தவறுகள் ஏதேனும் இருந்தால், அதிமுகவினரோ, பாஜகவினரோ சுட்டிக் காட்டலாம். அதற்கான உரிமை அவர்களுக்கு உண்டு. அதை விட்டுவிட்டு, மாநில சுயாட்சியைத் தவிடுபொடியாக்கும் வகையில், ஒன்றிய அரசு மூலம், இவர்களாகவே ஒரு போலியான அரசாங்கம் நடத்த முயற்சிக்கிறார்கள். அது நடக்கக்கூடாது.

Advertisment

Annamalai is a cheap political place that spreads slander! - Durai Vaiko Sulir!

தமிழக மீனவர் விவகாரத்தில் அண்ணாமலை இலங்கை சென்றபிறகே, பல்வேறு பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுள்ளன. திராவிட கட்சிகள் வெறும் அரசியல் மட்டுமே செய்கின்றன என அர்ஜுன் சம்பத் பேசியிருக்கிறாரே?

சகோதரர் அர்ஜுன் சம்பத்தாக இருக்கட்டும்.. சகோதரர் அண்ணாமலையாக இருக்கட்டும். அவர்களது அறிக்கைகளைப் பார்க்கும்போது மலிவான அரசியலே செய்கின்றனர். இலங்கையில் நிலவும் தற்போதைய சூழ்நிலையைப் பயன்படுத்தி, இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து, தமிழக மீனவர்கள் பிரச்சனையைச் சரி செய்யவும், கச்சத்தீவை மீட்கவும், ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். மீட்க இயலாவிட்டாலும், கச்சதீவைச் சுற்றியுள்ள பகுதிகளில் மீன் பிடிக்கும் உரிமையையாவது வாங்கித் தரவேண்டும். இதில் அரசியல் எதுவும் கிடையாது. சகோதரர் அண்ணாமலைக்கு நான் கூறிக்கொள்வதெல்லாம், குற்றச்சாட்டுகளையும் குறைகளையும் கூறலாம். அவதூறு பரப்பும் மலிவான அரசியல் பண்ணக்கூடாது.

இவ்வாறு பதிலளித்தார் துரை வைகோ.

viruthunagar pressmeet
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe