/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_4324.jpg)
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனர்களை அகற்ற ஆணையர் சரவணகுமார் உத்தரவிட்டிருந்தார். அதன்படி நேற்று முதல் தொடர்ந்து பிளக்ஸ் பேனர்கள் அகற்றும் பணி நடைபெற்றது.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருமாநிலையூர் ரவுண்டானா பகுதியில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையின் ‘என் மண்; என் மக்கள்’நடைப்பயணம் நடைபெற உள்ளது. இன்று மாலை 5 மணிக்கு திருமாநிலையூர் ரவுண்டானா பகுதியில் துவங்கி தான்தோன்றி மலை பெருமாள் கோவில் வரை இன்றைய நடைப்பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அப்பகுதியில் அண்ணாமலையை வரவேற்க பிளக்ஸ் பேனர்களை பா.ஜ.க.வினர் வைத்துள்ளனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_4910.jpg)
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த திமுவைச் சேர்ந்த கரூர் மேயர் கவிதா கணேசன், அப்பகுதியில் வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனரை அகற்ற மாநகராட்சி ஊழியருக்கு உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து ரவுண்டானாவில் வைக்கப்பட்டிருந்த அண்ணாமலை நடைப்பயண பிரச்சார பிளக்ஸ் பேனர் மாநகராட்சி ஊழியர்களால் அகற்றப்பட்டது.
இதன் காரணமாக அங்கு பாஜகவினர் கூடியுள்ளதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால், அசம்பாவிதம் ஏற்படாத வகையில் தற்போது போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)