Annamalai answer to the police!

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக, காவல்துறை வைத்த குற்றச்சாட்டுக்கு பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை மூலம் பதிலளித்துள்ளார்.

Advertisment

இது தொடர்பாக, பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், தீவிரவாத சம்பவங்கள் தமிழகத்தில் நிகழாமல் இருக்க சமரசமின்றி காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழனின் பெருமையை கர்நாடகாவில் நிலைநாட்டி விட்டு வந்துள்ளேன். ஜமேசா முபீன் பற்றிய தகவல்கள் காவல்துறை தலைமைக்கு காவல்துறையில் இயங்கும் ஒரு தனிப்பிரிவு வழங்கியுள்ளது.

Advertisment

ஜமேசா முபீன் வைத்திருந்த வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் பற்றி குறிப்பிட்டிருந்தோம். அதை காவல்துறை மறுக்க முடியுமா? ஜமேசா முபீனை கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வராமல் கோட்டை விட்டுள்ளது தமிழக காவல்துறை. கோவை கார் வெடிப்பு சம்பவத்துக்கு முன்பே ஜமேசா முபீன் குறித்து மத்திய உள்துறையின் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது"எனத் தெரிவித்துள்ளார்

காவல்துறையில் தனிப்பிரிவு வழங்கிய அறிக்கையின் சில பகுதிகளை சுட்டிக்காட்டி அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Advertisment