Advertisment

"வடக்கில் உதித்த சமத்துவ சூரியன் அண்ணல் அம்பேத்கர்...."- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை!

Annal Ambedkar, the rising sun of equality in the North ...

Advertisment

தமிழக முதலமைச்சரும், தி.மு.க.வின் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (13/04/2022) வெளியிட்டுள்ள அறிக்கையில், "வடக்கில் உதித்த சமத்துவ சூரியன் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14- ஆம் தேதி இனி சமத்துவ நாள் என்று கொண்டாடப்படும் என தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் இன்று அறிவித்துள்ளேன்.

சமத்துவ நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, நாளை (14/04/2022) அன்று கட்சி சார்பில் அனைத்து மாவட்டக் கட்சி அலுவலகங்களிலும் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திட வேண்டும் எனவும்; தமிழ்நாட்டில் உள்ள 238 சமத்துவபுரங்களிலும் உள்ள தந்தை பெரியாரின் சிலை முன் புரட்சியாளர் அம்பேத்கரது திருவுருவப்படத்தை வைத்து மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்ட கட்சியினர் மரியாதைச் செலுத்தி சமத்துவ நாளைக் கொண்டாடிட வேண்டும் என்றும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

statement Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe