Advertisment

தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியில் மாணவிகள் தங்கம் வென்று சாதனை!

தேசிய கிராமப்புற விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் டெல்லியில் நடந்த தடகள போட்டிகளில் தேசிய அளவிலான பெண்களுக்கான கூடைப்பந்தாட்ட போட்டியில் தமிழக அணி சார்பில் பங்கேற்க திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு அன்னை வேளாங்கண்ணி பள்ளி மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கடந்த 2ஆம் தேதி டெல்லியில் நடந்த 17 வயதுக்கான கூடைப்பந்து போட்டியில் தமிழ்நாடு டெல்லி உத்தரகாண்ட் இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கிராமப்புற பள்ளி அணிகள் பங்கேற்றனர்.

Advertisment

s

நாக்-அவுட் முறையில் நடந்த போட்டிகளில் அரையிறுதி போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தமிழக அணி தகுதி பெற்றது. பின்னர் நடந்த இறுதிப் போட்டியில் ஹரியானா மாநில அணியுடன் மோதிய தமிழக வீராங்கனைகள் (30-34) என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி வத்தலகுண்டு மாணவிகள் தங்கப்பதக்கம் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்தனர்.

Advertisment

s

வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பயிற்சியாளர் வெண்மணி ஆகியோருக்கும் பாராட்டு விழா அன்னை வேளாங்கண்ணி பள்ளியில் நடைபெற்றது. பள்ளி தாளாளர் சேவியர் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் அற்புத சாமி முன்னிலை வகித்தார். விழாவில் யங்ஸ்டார் கிளப் செயலாளர், போஸ் ராயல் கிளப் செயலாளர் முத்துப்பாண்டி, வதிலை ஸ்டார் கிளை செயலாளர் மருது மற்றும் முன்னாள் கூடைப்பந்து வீரர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் வெற்றி பெற்று வந்த வீராங்கனைகளை பாராட்டினார். அடுத்தபடியாக அண்டை நாடுகளுக்கு இடையே நடக்க உள்ள போட்டிகள், தங்கள் பள்ளி வீராங்கனைகள் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக பள்ளி முதல்வர் அற்புதசாமி கூறினார்.

school
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe