/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/SIREN-ART_0.jpg)
சென்னை அண்ணாநகரில் உள்ள அன்னை சத்யாநகரில் இருவேறுஇடங்களில்பெட்ரோல்குண்டு வீசப்பட்டுள்ளது. இது தொடர்பாகபாலமுரளிஎன்பவரைபோலீசார்கைது செய்துள்ளனர்.பெட்ரோல்குண்டு வீசப்பட்டதற்கான காரணம் குறித்துபோலீசார்தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் நல்வாய்ப்பாகபெட்ரோல்குண்டு வீச்சில் யாருக்கும் காயம் ஏற்படவில்லைஎனக்காவல் துறைதரப்பில் இருந்துதகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட பால முரளி மீது காவல் நிலையத்தில் ஏற்கனவே இரண்டு வழக்குகள் நிலுவையில்உள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளின் கொலை சம்பவங்கள் தொடர்பாக எதிர்க்கட்சியினர் பலரும் தமிழகத்தின் சட்ட ஒழுங்கு குறித்து கேள்விகளை எழுப்பி வரும் நிலையில் சென்னையில் 2 இரண்டு இடங்களில்பெட்ரோல்குண்டு வீசப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)