ADVERTISEMENT

பேரறிஞர் அண்ணாதுரைக்கு பிடித்த திருவண்ணாமலையில் அண்ணாதுரையே வெற்றி

03:37 PM May 25, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT


பேரறிஞர் அண்ணாதுரைக்கு மிகவும் பிடித்த ஊர்களில் குறிப்பிடதக்கது திருவண்ணாமலை. அதற்கு காரணம், திமுக தேர்தலில் போட்டியிடலாம் என தொண்டர்கள் கருத்துப்படி தேர்தல் களத்துக்கு வந்தது. 1967 நாடாளுமன்ற பொதுத்தேர்தல். திருவண்ணாமலை தொகுதியில் பேரறிஞர் அண்ணாவின், அன்பு தம்பியாக இருந்த இரா.தர்மலிங்கம் வெற்றி பெற்றார். திமுகவின் முதல் வெற்றியென்றால் அது இதுதான். இதனால் அண்ணாவுக்கு திருவண்ணா மலையென்றால் பிடிக்கும். 1971 தேர்தலிலும் திமுக வெற்றி பெற்றது.

ADVERTISEMENT


1972ல் ஏற்பட்ட தொகுதி சீரமைப்பில் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி என்பது திருப்பத்தூர் நாடாளுமன்ற தொகுதியாக பெயர் மாறியது. திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி வந்தவாசி தொகுதியோடு இணைக்கப்பட்டது. இப்படி மாறினாலும் தொடர்ச்சியாக திருவண்ணாமலையை உள்ளடக்கிய தொகுதியான வந்தவாசியில் திமுகவே வெற்றி பெற்றுவந்தது. 1977ல் மட்டும் அதிமுக வேட்பாளர் வேணுகோபால் என்பவர் வெற்றி பெற்றார். அதன்பின் இந்த தொகுதியை காங்கிரஸ் பிடித்துக்கொண்டது. திமுக, அதிமுக மீது குதிரை சவாரி செய்து வெற்றியை பெற்றுவந்தது. திமுக ஆதரவோடு பாமக, தமாக, மதிமுக வெற்றி பெற்றுள்ளன.


அதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்தின் 3 தொகுதிகளை உள்ளடக்கிய திருப்பத்தூர் தொகுதியில் தொடர்ச்சியாக திமுகவே வெற்றி பெற்றுவந்தது. 1977ல் விஸ்வநாதன், 1980ல் முருகையன் திமுக சார்பில் வெற்றி பெற்றனர். அதன்பின் 1984, 1989, 1991ல் திமுக, அதிமுக ஆதரவோடு காங்கிரஸ் ஜெயமோகன் வெற்றி பெற்றார். 1996, 1998, 1999, 2004 என நான்கு முறை வெற்றி பெற்றார்.


2009ல் தொகுதி சீரமைப்பில் திருப்பத்தூர் நாடாளுமன்ற தொகுதி திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதில் திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி இணைந்தது. அதன்பின் நடைபெற்ற தேர்தலில் 2009 திமுகவே வெற்றி பெற்றது. வேணுகோபால் தொடர்ச்சியாக 5 முறை இந்த தொகுதியில் வெற்றி பெற்றார்.


2014ல் இந்த தொகுதியில் திமுகவில் யார் வேட்பாளர் என தேடல் நடந்தது. அறிவாலயத்தில் நடந்த நேர்காணலில் விருப்பமனு தாக்கல் செய்தவர்களை கலைஞர் நேர்காணல் செய்தபோது, சி.என்.அண்ணாதுரை என்கிற பெயரை பார்த்து மகிழ்ந்துப்போய் அவருக்கு டிக் செய்தார் கலைஞர். மாவட்ட இளைஞரணி அமைப்பாளராகவுள்ள இளைஞர், பட்டதாரி, பணக்காரர் என ப்ளஸ்கள் இருந்தாலும் சி.என்.அண்ணாதுரை என்கிற பெயரே சீட் பெற முக்கிய காரணமாக அமைந்தது.


பேரறிஞர் அண்ணாவுக்கு பிடித்த தொகுதியில், திமுகவின் கோட்டையாக விளங்கிய தொகுதியில் பேரறிஞரின் பெயரை கொண்ட அதே சி.என்.அண்ணாதுரை வேட்பாளராக நிறுத்தப்பட்டார். 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி தோல்வியடைந்தது. அதில் திமுகவின் கோட்டையான திருவண்ணாமலையும் அடக்கம்.


2019ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அதே சி.என்.அண்ணாதுரையையே திமுக தலைமை, திருவண்ணாமலை தொகுதியில் வேட்பாளராக நிறுத்தியது. இந்த முறை 2.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று திருவண்ணாமலை தொகுதியை மீண்டும் திமுகவின் கோட்டையாக்கியுள்ளது என கொண்டாடுகிறார்கள் திமுகவினர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT