'Annaththa' motion poster released!

Advertisment

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'அண்ணாத்த' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் ட்விட்டரில் இன்று காலை வெளியானது. டி.இமான் இசையமைத்துள்ள 'அண்ணாத்த' திரைப்படம் தீபாவளி வெளியீடாக வரும் நவம்பர் மாதம்- 4 ஆம் தேதி திரைக்கு வருகிறது. சிவா இயக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, குஷ்பூ, மீனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

'அண்ணாத்த' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை ரஜினி ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிற நிலையில் தற்பொழுது'அண்ணாத்த' திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/D9ILcT329Kw.jpg?itok=vX56txvJ","video_url":" Video (Responsive, autoplaying)."]}