Skip to main content

சூரப்பா மீது புகார்- விசாரணை நடத்த குழு அமைத்தது தமிழக அரசு!

Published on 13/11/2020 | Edited on 13/11/2020

 

anna university vice chancellor tamilnadu government

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மீதான புகார் பற்றி விசாரணை நடத்த குழு அமைத்தது தமிழக அரசு.

 

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மீதான புகார்கள் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மூன்று மாதங்களில் அறிக்கை அளிக்கவும் விசாரணை குழுவுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. குழு தரும் விசாரணை அறிக்கை அடிப்படையில் சூரப்பா மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்புத் தகுதி, அரியர் தேர்வு ரத்து விவகாரங்களில் அரசின் நிலைப்பாட்டிற்கு சூரப்பா அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில் குழு அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்; தமிழக அரசு அதிரடி

Published on 05/08/2023 | Edited on 05/08/2023

 

ஐபிஎஸ் அதிகாரிகள் 33 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக உள்துறை செயலாளர் அமுதா உத்தரவிட்டுள்ளார்.

 

அதன்படி, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த எஸ்.பி. ஸ்ரீநாதா, டிஜிபி அலுவலக உதவி ஐ.ஜி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சேலம் எஸ்.பி.யாக இருந்த சிவகுமார், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி.யாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி எஸ்.பி.யாக இருந்த சுஜித்குமார் மதுரை தெற்கு அமலாக்கப் பிரிவு எஸ்.பி.யாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மதுரை தெற்கு மண்டல அமலாக்கப் பிரிவு எஸ்.பி.யாக இருந்த வருண் குமார், திருச்சி மாவட்ட எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

சென்னை தியாகராய நகர் துணை ஆணையராக இருந்த அருண் கபிலன், சேலம் எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அடையாறு துணை ஆணையர் மகேந்திரன், சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை தெற்கு போக்குவரத்து காவல்துறை துணை ஆணையராக மகேஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தாம்பரம் துணை ஆணையர் அதிவீரபாண்டியன், நாகை கடலோர பாதுகாப்புப் படை எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர்கள் உட்பட மொத்தம் 33 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


 

Next Story

சென்னையில் கரும்பு விவசாயிகள் சார்பில் நடைபெற்ற பேரணி (படங்கள்)

Published on 17/02/2023 | Edited on 17/02/2023

 

கரும்பு விவசாயிகள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (17.02.2023)  சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து ஊர்வலமாகச் சென்று தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் பேரணி நடைபெற்றது. தமிழ்நாடு அரசு சார்பில், கரும்பு டன் ஒன்றுக்கு 4 ஆயிரம் ரூபாயை மாநில அரசு எஸ்.ஏ.பி. விலையாக நிர்ணயம் செய்து வழங்கக் கோரியும், தஞ்சை ஆரூரான் சர்க்கரை ஆலை பெற்ற கரும்பு விவசாயிகள் மீதுள்ள வங்கிக் கடனை ஆலைப் பெயரில் மாற்றக் கோரியும் இந்தப் பேரணியில் கலந்துகொண்ட  விவசாயிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டது. இந்தப் பேரணியில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர். கரும்பு விவசாயிகளின் பேரணிக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.