anna university vice chancellor governor order

Advertisment

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தரை தேர்வு செய்யும்குழு தலைவரை நியமித்து, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக உள்ள ஜெகதீஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே 2020ஆம் ஆண்டு, சென்னை பல்கலைக்கழகத் துணை வேந்தரை தேர்வு செய்யும் குழு தலைவராக இருந்தவர் ஜெகதீஷ் குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெகதீஷ் தலைமையிலான குழு, துணைவேந்தர் பதவிக்கு மூவரை தேர்வு செய்து ஆளுநருக்குப் பரிந்துரை அளிக்கும். குழு பரிந்துரைத்த மூவரில் ஒருவரை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக தேர்வு செய்து ஆளுநர் அறிவிப்பார்.

தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக உள்ள சூரப்பாவின் பதவிக் காலம் ஏப்ரல் 11ஆம் தேதியுடன் முடிவடைவதால், புதிய துணை வேந்தரைத் தேர்வு செய்ய குழு தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.