ANNA UNIVERSITY TAMILNADU MINISTERS LETTERS UNION GOVERNMENT

Advertisment

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என மத்திய அரசுக்கு, தமிழக அரசு அமைத்த அமைச்சர்கள் குழு கடிதம் எழுதியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஏற்கனவே கூறிய நிலையில், தமிழக அரசு அமைத்த கே.பி.அன்பழகன், செங்கோட்டையன், சி.வி.சண்முகம், ஜெயக்குமார், தங்கமணி கொண்ட அமைச்சர்கள் குழு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

அந்த கடிதத்தில், 'துணைவேந்தர் சூரப்பா கூறியது போல் அண்ணா பல்கலைக்கழகத்தால் தனியாக நிதி திரட்ட முடியாது. அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கனவே நிதி பற்றாக்குறையில் இருக்கிறது, உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை. பல்கலைக்கழக துணைவேந்தரின் ஆலோசனைகள் ஏற்புடையதாக இல்லை' என குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisment

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கலாம் என துணைவேந்தர் சூரப்பா கடந்த ஜூன் மாதம் மத்திய கல்வி அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.