Advertisment

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வகித்து வந்த பதவி பரந்தாமனுக்கு ஒதுக்கீடு!

Advertisment

anna university syndicate member egmore mla paranthaaman appointed

அண்ணா பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழுவின் அலுவல் சாரா உறுப்பினராக எழும்பூர் எம்.எல்.ஏ. பரந்தாமன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

2021 ஆம் ஆண்டு முதல் அண்ணா பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழுவின் (சிண்டிகேட் குழு) அலுவல் சாரா உறுப்பினராகப் பதவி வகித்து வந்த சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், சில மாதங்களுக்கு முன்னர் அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில்அண்ணா பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழுவின் அலுவல் சாரா உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். இந்நிலையில் இந்த பொறுப்புக்கு எழும்பூர்சட்டமன்றத்தொகுதி உறுப்பினர் பரந்தாமன் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சட்டமன்ற உறுப்பினராக உள்ள ஒருவர் தான் அண்ணா பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழுவின் அலுவல் சாரா உறுப்பினராகப் பதவி வகிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Egmore MLA
இதையும் படியுங்கள்
Subscribe