Published on 18/12/2019 | Edited on 18/12/2019
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
![anna university semester exam postponed local body election](http://image.nakkheeran.in/cdn/farfuture/2d7yo5Hry_n5T4sTgfQJK0NS3EgM54w_rNwjBZPBhD4/1576681527/sites/default/files/inline-images/anna%20university6.jpg)
அந்த அறிவிப்பில் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 27- ஆம் தேதி நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வு (02.01.2020) நடைபெறும் என்றும், டிசம்பர் 30- ஆம் தேதி நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வு (03.01.2020) நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.