Advertisment

24 மதிப்பெண்ணுக்கு 94; ஒன்பது ஆண்டுகளுக்கு சேர்த்து வினாத்தாள் அச்சடிப்பு;240 கோடி கைமாற்றம்;அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் 3 பேர் பணியிடை நீக்கம்

anna university

சென்னைகிண்டியில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகிறது. பொறியியல் படிப்புகளுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை செமஸ்டர் தேர்வுகள் நடைபெறுவது அனைவரும் அறிந்த ஒன்றாகும் இந்த தேர்வுகளில் குறைந்த மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் மற்றும் தேர்ச்சி பெறாமல் போகும் மாணவர்கள் ஆகியோர் மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பார்கள் அதற்கு தனியாக தொகையை செலுத்த வேண்டும் இந்த நிலையில் 2017 -ஆம் ஆண்டு ஏப்ரல் மே ஜூன் ஆகிய மாதங்களில் நடைபெற்ற செமஸ்டர் தேர்வு முடிவுகளுக்கு பின்னர் 1 லட்சத்து இரண்டாயிரத்து 380 பேர் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்திருந்தனர் இதில் 73 ஆயிரத்து 733 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் குறிப்பாக 16 ஆயிரத்து 636 பேர் அதிக மதிப்பெண் பெற்றனர். இதில் உமா, விஜயகுமார், சிவகுமார் ஆகியோர் அதிக மதிப்பெண் வழங்க ஒவ்வொரு மாணவரிடமும் பத்தாயிரம் ரூபாய் வாங்கிஇருப்பதாகவும் சொல்லப்பட்டு இருக்கிறது. இதில் 240 கோடி கைமாறியதாக கூறப்படும்நிலையில்.

Advertisment

இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களது வீடுகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இதுதொடர்பாக பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. அதில் ஒரு மாணவி மறுகூட்டலில்94 மதிபெண்கள் பெற்றதையும் ஆனால் அதற்கு முன் வெறும்24 மதிப்பெண்கள்பெற்றதையும் போலீசார் கண்டறிந்தனர். அதேபோல் பல மாணவர்கள் குறைந்த மதிப்பெண் எடுத்து மறுகூட்டலில் அதிக மதிப்பெண் எடுத்துள்ளனர்.இது தொடர்பாக50 மாணவர்களை போலீசார் விசாரித்தனர். அதேபோல் வருடத்திற்கு இருமுறை வினாத்தாள் அச்சடிக்கப்படுவதை விடுத்து 9 ஆண்டுகளுக்கு சேர்த்து வினாத்தாள் அச்சடிக்கபட்டதும் கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டிருப்பதாக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ள நிலையில்இந்த சம்பவம் தெடர்பாக பேராசிரியர்கள் வியாஜகுமார், உமா,சிவகுமார் என மூன்று பேராசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisment
Professor cheating Anna University
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe