Advertisment

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். அண்ணா பல்கலைகழகம் மாநில அரசின் நிர்வாகக் கட்டுப்பாட்டிலேயே இறுதிவரை தொடர வேண்டும் என்பதை வலியுறுத்தி தி.மு.க இளைஞரணி மற்றும் மாணவரணியினர் இணைந்து தமிழகம் முழுவது இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அதில் ஒரு பகுதியாக காலை 9.30 மணிக்கு தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், சென்னைஅண்ணா பல்கலைக்கழகம் எதிரே காந்தி மண்டபம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், அண்ணா பல்கலைக்கழகத்தை பிரிப்பதால் எதிர்காலத்தில் நேரப்போகும் பாதிப்புகள் குறித்தும், துணைவேந்தர் சூரப்பாவைக் கண்டித்தும் கண்டனம்தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனர்.