anna university

Advertisment

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்குஉயர் சிறப்பு அந்தஸ்து கோரி, மத்திய அரசுக்குஅண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா ஜூன் மாதம் கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் மாநில அரசின் நிதி இல்லாமலே பல்கலைக்கழகத்தை இயக்கமுடியும் எனக் குறிப்பிட்டிருந்தார். தற்போது அதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விளக்கம் அளித்த அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, மாநில அரசிடம் என்ன தெரிவித்தேனோ அதையே மத்திய அரசுக்கு கடிதமாக அனுப்பியுள்ளேன் என்று தெரிவித்தார்.

அண்ணா பல்கலைக்கழக்கத்தின் உயர் சிறப்பு அந்தஸ்து தொடர்பாக தமிழகத்தில் பிரச்சனை வெடித்த பிறகு, அ.தி.மு.க அரசு நாங்கள் மக்களுக்கு எதிராக செல்படமாட்டோம் எனத் தெரிவித்தார்கள். ஆனால் எழுத்துப் பூர்வமாக எந்தத் தகவலும் மத்திய அரசுக்கு அனுப்பவில்லை.

Advertisment

இந்த கடிதத்திற்கு காரணம்,தேர்வில் நடைபெற்ற முறைகேட்டில் அமைச்சருக்கும் தொடர்பு உண்டு என்று சூரப்பா கூறியதே. மேலும், உயர்க்கல்வித்துறை அமைச்சர் கே.பிஅன்பழகனுக்கும், துணைவேந்தர் சூரப்பாவுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையும் ஒரு காரணம் என்கிறார்கள்.

Ad

இதன் பிறகுதான் உயர்க்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரித்து, அதன் பெயர் மாற்றப்படும் என்று சட்டசபையில் அறிவித்தார். முறைகேடாக தேர்ச்சி பெற்றவர்கள் அதிகமானோர் தனியார் கல்லூரியைச் சேர்ந்தவர்களே என்பதனால், தனியார் மற்றும் அரசு கல்லூரிகள் என இரண்டையும் தனித்தனியாகப் பிரித்துபிரச்சனையைத் தீர்த்துக்கொள்ளவும் முடியும். இதுதான் இதன் பின்புலம் என்கிறார்கள்.