Skip to main content

அண்ணா பல்கலைக்கழக முதல்வர்மீது துணைப்பேராசிரியை பாலியல் புகார்; திருக்குவளையில் பரபரப்பு...

indiraprojects-large indiraprojects-mobile

திருக்குவளை அண்ணா பல்கலைக்கழக முதல்வர் மீது பெண் துணை பேராசிரியர் காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் நாகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

anna univ

 

 

நாகை மாவட்டம் திருக்குவளை அண்ணா பல்கலைக் கழகத்தில் துணை பேராசிரியராக இருப்பவர் ஹேமா. அதே பல்கலைக் கழகத்தில் முதல்வராக இருப்பவர் (பொறுப்பு)  துரைராசன். இவர் ஹேமாவிற்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும். ஒரு கட்டத்தில் எல்லைமீறிய முதல்வர் துரையரசன், கையெழுத்து வாங்க சென்ற துறைப் பேராசிரியை ஹேமாவிடம் தவறாக நடந்துகொண்டதோடு, தனது பாலியல் இச்சைக்கு அடிபணிந்து போகவும் வற்புறுத்தியுள்ளார். ஒருகட்டத்தில் சுதாரித்துக்கொண்ட ஹேமா, வீட்டிற்கு வந்து  நடந்ததை அவரது கணவரிடம் கூறி விட்டு  துரைராசை செல்போனில் தொடர்புக்கொண்டு தான் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டியுள்ளார். 

மேலும் பல்கலைக்கழக முதல்வர் துரைராஜ் மீது திருக்குவளை காவல் நிலையத்தில் ஆடியோ ஆதாரங்களுடன் பாலியல் புகாரையும் அளித்துள்ளார். துணை பேராசிரியர் ஹேமாவிடம் புகாரை பெற்றுக் கொண்ட திருக்குவளை போலீசார் புகார் குறித்து பல்கலைக்கழக தலைமையகத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இது ஒருபுறமிருக்க பெண் துணை பேராசிரியர் கொடுத்தது பொய் புகார் என்று பல்கலைக்கழக முதல்வருக்கு ஆதரவாக ஒரு துறையை சேர்ந்த மாணவர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். 

“பல்கலைக்கழகத்தில் நடந்தது என்ன என்பது குறித்து விசாரணை குழு அமைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என மாணவர்களும் பெற்றோர்களும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். 

அதே போல், “கல்லூரி முதல்வர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என இந்து முன்னணி மற்றும் மகளிர் அமைப்புகள் சார்பாக திருக்குவளை சுற்றுவட்டார பகுதிகளில் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். அந்த சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Loading...