ADVERTISEMENT

"உயர்கல்வி பயில்வோரில் இந்தியாவிலேயே தமிழகம்தான் முதலிடம்" - அமைச்சர் பொன்முடி

10:37 AM Jul 29, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் 42வது பட்டமளிப்பு விழா இன்று (29/07/2022) காலை 10.00 மணிக்கு, விவேகானந்தர் அரங்கத்தில் தொடங்கியது. இவ்விழாவில், தலைமை விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேருரை நிகழ்த்துகிறார். அத்துடன், 69 மாணவ, மாணவியர்களுக்கு தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழை வழங்குகிறார். அதேபோல், இந்த விழாவிற்கு தலைமைத் தாங்கும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார்.

விழாவிற்கு கௌரவ விருந்தினராகப் பங்கேற்கும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிறப்புரை நிகழ்த்துகிறார். தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ரா.வேல்ராஜ் மற்றும் பல்கலைக்கழக ஆட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

விழாவில் வரவேற்புரையாற்றிய அமைச்சர் க.பொன்முடி, "பட்டம் பெறுபவர்கள் வேலைத் தேடுபவர்களாக இல்லாமல் வேலை கொடுப்பவர்களாக இருக்க வேண்டும். நான் முதல்வன் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து செயல்படுத்தி வருகிறார். பெண்களின் உயர்கல்வியை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. அரசுப் பள்ளியில் பயிலும் மாணவிகள் உயர்கல்விப் பயில ரூபாய் 1,000 வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் அறிவித்துள்ளார். உயர்கல்வி பயில்வோரில் இந்தியாவிலேயே தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி உறுதுணையாக இருக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் 70 ஆண்டுகளுக்கு பிறகு தலைமை விருந்தினராக பிரதமர் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT