anna university chennai high court engineering colleges

Advertisment

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு முழு அதிகாரம் உள்ளதாக, பொறியியல் கல்லூரிகள் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

போதுமான பேராசிரியர்கள் இல்லாததால் செங்கல்பட்டு மாவட்டத்தில் இரு தனியார் பொறியியல் கல்லூரிகளின் இணைப்பை அண்ணா பல்கலைக்கழகம் ரத்து செய்தது. இதையடுத்து மாணவர் சேர்க்கையைஏ.ஐ.சி.டி.இநிறுத்தி வைத்தது.

anna university chennai high court engineering colleges

Advertisment

இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் ஏ.ஐ.சி.டி.இமுடிவை எதிர்த்து, பொறியியல் கல்லூரிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று (20/10/2020) விசாரணைக்கு வந்தபோது, வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'பொறியியல் கல்லூரிகளுக்கு இணைப்பு வழங்கவும், இணைப்பை நிறுத்திவைக்கவும் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு முழு அதிகாரம் உள்ளது. தரமான கல்வியை வழங்க அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது' எனத் தெரிவித்துள்ளனர்.