anna tributes dmk rally announced

அண்ணா நினைவு நாளான பிப்ரவரி 3-ஆம் தேதி அண்ணா நினைவிடம் நோக்கிப் பேரணி நடைபெறும் என்று சென்னை மாவட்ட தி.மு.க. அறிவித்துள்ளது.

Advertisment

சென்னை மாவட்ட தி.மு.க. வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பேரறிஞர் அண்ணாவின் 52-வது நினைவு நாளையொட்டி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலுமற்றும் கழக முன்னணியினர், பிப்ரவரி3, புதன்கிழமைகாலை 07.00 மணிக்குகாமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவர்.

Advertisment

இந்த அமைதிப் பேரணி வாலாஜா சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை அருகிலிருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கத்தை சென்றடையும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.