ANNA STATUE INCIDENT IN KALLAKURICHI DISTRICT

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் நாளை மறுநாளுடன் (04/04/2021) நிறைவு பெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள் ஆகியோர் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், மாதவச்சேரி அருகே உள்ள அண்ணா சிலை, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள காரணத்தால், துணியால் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று (01/04/2021) நள்ளிரவு மர்ம நபர்கள் அண்ணா சிலைக்குத் தீ வைத்துள்ளனர். தீ வைத்ததில் சிலை கருகி சேதமடைந்தது.

Advertisment

இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள், சிலைக்குத் தீ வைத்தவர்களைக் கைதுசெய்யக்கோரி சிலை முன்பு திரண்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற கச்சராபாளையம் காவல்துறையினர், நேரில் ஆய்வு செய்து, வழக்குப் பதிவுசெய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment