பேரறிஞர் அண்ணாவின் 111- வது பிறந்தநாளையொட்டி சென்னையில் அவரது சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை. வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். திமுகவை சேர்ந்த டி.ஆர் பாலு எம்.பி மற்றும் செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.