வேட்பு மனுத்தாக்கல் செய்த அண்ணா நகர் தொகுதி மநீம வேட்பாளர்கள்! (படங்கள்)

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனுத் தாக்கல் கடந்த மாதம் 28ஆம் தேதி முதல் தொடங்கியது.

வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாள் பிப்ரவரி 4ஆம் தேதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட அனைத்து கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையைத்தொடங்கியுள்ளன.

இந்த நிலையில் இன்று (03.02.2022) அண்ணா நகரில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் அண்ணா நகர் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளில் போட்டியிடும் மநீம வேட்பாளர்கள் வேட்பு மனுக்களைத்தாக்கல் செய்துள்ளனர்.

candidates election 2022 mnmparty
இதையும் படியுங்கள்
Subscribe