தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றதையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கலைஞர் மற்றும் அண்ணா நினைவிடங்களில் தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதைச் செலுத்தினார். இந்த நிகழ்வின் போது, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், ஆ.ராசா, கலாநிதி வீராசாமி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisment

அதைத் தொடர்ந்து, கோபாலபுரம் இல்லத்திற்குச் சென்ற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மலர்த்தூவி மரியாதைச் செலுத்தினார்.

Advertisment