anna arivalayam employees private hospital doctors team take samples

Advertisment

சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

தி.மு.க. எம்.பி. ஆர்.எஸ்.பாரதி, எம்.எல்.ஏ.மா.சுப்பிரமணியனுக்கு கரோனா பாதிப்பு இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அண்ணா அறிவாலயத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. தனியார் மருத்துவமனையில் இருந்து அண்ணா அறிவாலயம் வந்த மருத்துவர்கள் கரோனா பரிசோதனை நடத்தினர்.

கடந்த வாரம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து சென்ற காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் குண்டுராவுக்கும் கரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.