Ankit Tiwari  bail plea dismissed again

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துணை சூப்பிரண்டாக இருக்கக்கூடிய டாக்டர் சுரேஷ்பாபுவின் சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்காமல் இருக்க ரூ. 20 லட்சம் லஞ்சம் பெற முயன்றபோது, கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டார். அதன்பின் திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டு மதுரை மத்திய சிறைக்கு மாற்றினார்கள்.

Advertisment

அதே சமயம் கைதான அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி, ஜாமீன் கோரி திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜாமீன் மனுவைத்தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்திருந்தார். இதனையடுத்து அங்கித் திவாரி 2 வது முறையாக திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஜாமின் கோரி கடந்த 1 ஆம் தேதி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

Advertisment

அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பான விசாரணையை நீதிபதி மோகனா பிப்ரவரி 5 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருந்தார். மேலும் இது தொடர்பான விசாரணை நேற்று நடைபெற்றது. இந்த விசாரணையின் போது அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்க கூடாது என லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் வாதிடப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குவதாக கூறி வழக்கை ஒத்தி வைத்திருந்தார். இந்நிலையில் அங்கித் திவாரி தாக்கல் செய்த ஜாமீன் மனுவை 2 வது முறையாக தள்ளுபடி செய்து திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.