Advertisment

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுக்கு இருமுறை ஆனித் திருமஞ்சனம், மார்கழி ஆருத்ரா என ஆண்டுக்கு இருமுறை தேர் மற்றும் தரிசன திருவிழா மிகவும் விமர்சையாக நடைபெறும். இவ்விழாவிற்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும்,வெளி நாடுகளிலிருந்தும் பக்தர்கள் வருகை தருவார்கள்.

Advertisment

 The AniThirumanjana festival started at the Chidambaram Natarajar Temple with the flag

அதேபோல் இந்த ஆண்டுக்கான ஆனித் திருமஞ்சன திருவிழாவுக்கானகொடியேற்றும் நிகழ்ச்சி சனிக்கிழமையன்று நடைபெற்றது. கொடியை உற்சவ ஆச்சாரியார் சபாபதி ஏற்றி வைத்தார். இதனைதொடர்ந்து இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 7-ந்தேதி தேதி தேர் திருவிழாவும், 8-ந்தேதி மதியம் மூன்று மணிக்குள் தரிசனம் நிகழ்ச்சியும் நடைபெறும்.

Advertisment

 The AniThirumanjana festival started at the Chidambaram Natarajar Temple with the flag

இதனையொட்டி பத்து நாட்கள் கோயிளில் விழாக்கள் நடைபெறும். திருவிழா நேரத்தில் அதிகமாக வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை சிதம்பரம் நகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல் காவல்துறை சார்பில் பக்தர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை சிதம்பரம் கோட்ட காவல்துறை துணைகண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் சிதம்பரம் ஆய்வாளர் முருகேசன் உள்ளிட்ட காவல்துறையினர் மேற்கொண்டு வருகிறார்கள்.

police Festival CHITHAMPARAM
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe