Advertisment

மகள் மீது கோவம்... தற்கொலை செய்துகொண்ட தம்பதி!

Angry over daughter ... Couple passed away

பெற்றோரின் சொல்லைக் கேட்காமல் மகள் காதல் திருமணம் செய்துகொண்டதால் மனமுடைந்த தந்தை மற்றும் தாய், விஷமாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே உள்ளது கம்மாளக் குட்டை கிராமம். இந்தக் கிராமத்தில் உள்ள பண்ணாரியம்மன் நகரைச் சேர்ந்தவர்கள் பழனிச்சாமி (58) - சுமதி (48) தம்பதி. இவர்களுக்கு ஜனனி (22) என்ற மகள் உள்ளார். இவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் ஃபிசியோதெரபி மருத்துவப் படிப்பு இறுதியாண்டு படித்துவருகிறார். ஜனனி, குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய கோழி இறைச்சி கடை நடத்திவருபவரைக் காதலித்துள்ளார்.

Advertisment

இதனை அறிந்த பெற்றோர்கள் தனது மகளைக் கண்டித்தும், காதலைக் கைவிடக் கோரியும் தொடர்ந்து வலியுறுத்திவந்துள்ளனர். ஆனாலும் ஜனனி தனது காதலைக் கைவிடவில்லை. மேலும், ஜனனி கடந்த 2ஆம் தேதி வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. அதேபோல் அவர்கள் திருமண கோலத்தில் இருப்பது போன்ற புகைப்படத்தை செல்ஃபோனில் பார்த்து பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று (05.09.2021), பழனிச்சாமி தனது தாயின் திதிக்கு சாமி கும்பிட வீட்டிற்கு வரச் சொல்லி உறவினர்கள் பலரையும் அழைத்துள்ளார். அவரது அழைப்பை ஏற்று நேற்று காலை உறவினர்களும் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது வீட்டிற்குள் நுழைந்த உறவினர்கள் பழனிச்சாமி - சுமதி இருவரும் வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Advertisment

தகவல் அறிந்த காவல்துறையினர் தம்பதியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவுசெய்து விசாரணை செய்தனர். விசாரணையில், படிக்காத 44 வயதானவரை மகள் காதல் திருமணம் செய்துகொண்டதால் மனமுடைந்த தம்பதி, தூக்குப்போட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளனர். ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்ததால், வாழைப்பழத்தில் விஷ மாத்திரைகளை வைத்து சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் விசாரணையில் தெரிவித்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவுசெய்து காவல்துறையினர் விசாரனை நடத்திவருகின்றனர்.

parents Tiruppur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe