Advertisment

இரண்டாம் திருமணத்திற்கு பெண் தராததால் ஆத்திரம்; பரமக்குடியில் நிகழ்ந்த கொடூர சம்பவம்

Anger at not giving a girl for a second marriage; The horrific incident at Paramakudi

Advertisment

பரமக்குடியில் இரண்டாம் திருமணத்திற்கு பெண் தராததால் பெண்ணின் தாயையும் இரண்டு குழந்தைகளையும் பெட்ரோல் ஊற்றி எரித்த நபர் தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பரமக்குடியை அடுத்த பொதுவக்குடி பகுதியைச் சேர்ந்தவர் குருவம்மாள். இவருடைய மகள் வனிதா. திருமணமான நிலையில் வனிதா கருத்து வேறுபாடு காரணமாகதன்னுடைய கணவரை பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் தென்னந்தோப்பு பகுதியில் உள்ள சிறிய அளவிலான வீடு ஒன்றில் வசித்து வந்தனர். அதே தென்னந்தோப்பு பகுதியில் ஆறுமுகசாமி என்பவர் வேலை செய்து வைத்தார். இந்நிலையில்வனிதாவை தனக்கு இரண்டாவதாக திருமணம் செய்து வைக்கும்படி குருவம்மாளிடம் ஆறுமுகசாமி தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால் குருவமம்மாளோ இதற்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரத்தில் இருந்த ஆறுமுகசாமி குருவம்மாள், வனிதா மற்றும் அவருடைய குழந்தைகள் என அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த பொழுது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார்.

இதில் வனிதாவின் தாய் குருவம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட வனிதா, 12 வயது மகள் திவ்யதர்ஷினி, குரு ஆகிய மூவரும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வனிதாவும், திவ்யதர்சனியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 80 சதவீத தீக்காயங்களுடன் சிறுவன் குரு மட்டும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

இந்த சம்பவத்தில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த ஆறுமுகசாமியும் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து எமனேஸ்வரம் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

police incident
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe