Advertisment

அங்கன்வாடி மைய மேற்கூரை திடீரென சரிந்து விழுந்து விபத்து-5 வயது சிறுவன் காயம்!

Anganwadi center roof collapses, 5-year-old boy injured

அங்கன்வாடி மையத்தில் மேற்கூரை திடீரென சரிந்து விழுந்ததில் 5 வயது சிறுவன் காயமடைந்த சம்பவம் திருவள்ளூரில் நிகழ்ந்துள்ளது.

Advertisment

திருவள்ளூர் மாவட்டம் பூனிமாங்காடு பகுதியில் உள்ளது சுமார் 20 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தில் இயங்கி வருகிறது அங்கன்வாடி மையம். இந்த மையத்தில் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள்பயின்று வரும் நிலையில் இன்று மதியம் அங்கன்வாடியிலிருந்த குழந்தைகள் அனைவரும் வெளியே விளையாடிக் கொண்டிருந்தனர். இந்த மையத்தில் பயின்று வந்த மூர்த்தி-ராஜேஸ்வரி தம்பைதியினரின் 5 வயதுமகன் விமல்ராஜ் மட்டும் உள்ளே தூங்கிக் கொண்டிருந்தான்.

Advertisment

Anganwadi center roof collapses, 5-year-old boy injured

அப்போது அங்கன்வாடி மையத்தின்மேற்கூரை திடீரென பெயர்ந்து கொண்டு கீழே விழுந்தது. இதில் ஐந்து வயது சிறுவன் விமல்ராஜ் சிக்கி காயமடைந்து மயக்கமடைந்தான். உணவு இடைவேளை நேரத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்தால் மற்ற குழந்தைகள் அதிர்ஷ்ட வசமாக தப்பினர். உடனடியாக மீட்கப்பட்ட 5 வயது சிறுவன் பூனிமாங்காடு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு முதலுதவி வழங்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு சிறுவன் கொண்டுசெல்லப்பட்டான். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

incident thiruvallur
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe