ADVERTISEMENT

கடத்தப்பட்ட ஆந்திர தொழிலதிபரின் பதறடிக்கும் டைம் – டூ – டைம் வாக்குமூலம்

11:44 PM Jul 17, 2019 | Anonymous (not verified)

மலிவு விலையில் கடத்தல் தங்கம் இருப்பதாகச் சொல்லி ஆந்திராவின் தொழிலதிபர் ராம்ஜோல் ரெட்டியைக் (28) கடத்தி, பணம் நகை பறித்த, நெல்லை மாவட்டத்தின் ஆட்கொடண்டார்குளத்தின் கடத்தல் கும்பலின் முத்துக்குமார் மற்றும் வசந்தகுமார் 2 பேர் சிக்கினர். கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்களை வளைத்து ராம்ஜோல் ரெட்டியை மீட்ட சேர்ந்தமரம் இன்ஸ்பெக்டர் பாலசந்தரிடம், அவர் கொடுத்த பரபரப்பு வாக்கு மூலம்…

ADVERTISEMENT

ADVERTISEMENT

எனது சொந்த மாநிலம் ஆந்திர பிரதேசம் சித்தூர் மாவட்டம், தம்பாலபள்ளி மண்டலம், பி.கொத்தகோட்டா கிராமத்தில் எனது பெற்றோர்களுடன் குடியிருந்து வருகிறேன். பெங்களூர் பானஸ்பாடியில் ஜி.ஆர்.கன்சல்டிங்கில் கடந்த எட்டு வருடமாக வேலை செய்து வருகிறேன். என்னுடன் பிறந்தது வெங்கட்ரமணன் ரெட்டி, லக்கநாராயணன் ரெட்டி ஆகிய இரண்டு அண்ணன்கள் இருக்கிறார்கள்.

எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. எனக்கு தெலுங்கு, கன்னடா, ஹிந்தி, இங்கிலீஸ் ஆகிய ஐந்து மொழிகளில் பேசத்தெரியும். ஆனால் எழுத தெரியாது, தமிழ்நாடு மாநிலம் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வக்குமார் கடந்த ஐந்து வருடங்களுக்கு பெங்களூருக்கு வேலை தேடி வந்தார். செல்வக்குமாருக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டு நண்பர்களாக பழகி வந்தோம். ஆறு மாத காலம் பெங்ளூரில் வேலை செய்து விட்டு செல்வக்குமார் அவனது சொந்தமான மாநிலத்திற்கு சென்று விட்டான்.

செல்வக்குமார் அடிக்கடி என்னிடம் போனில் பேசுவான். நான் எனது சொந்த வேலையாக சென்னைக்கு வந்தால் செல்வகுமாருக்கு போன் செய்வேன் அவனும் வருவான். ஹோட்டலுக்கு சென்று சாப்பிடுவோம் பின்னர் அவரவர் வேலை பார்த்து சென்று விடுவோம். 29.06.2019ம் மாலை செல்வக்குமார் எனக்கு போன் செய்து ஒரு டீல் பண்ணலாம் என்று கேட்டான். அதற்கு நான் என்ன டீல் என்று கேட்டேன். எனக்கு கஸ்டம்ஸ் ஆபிசரை நல்லா தெரியும் அவரிடமிருந்து 1 கிலோ கோல்டு 24 லட்சத்திற்கு வாங்கி தருவதாக சொன்னான். உடனே நான் கஸ்டம்ஸ் ஆபீசரை எப்படி தெரியும்?. என்று கேட்டேன், அதற்கு நான் பிலிம் இன்ஸ்ட்டிரியில் வேலை செய்து வருவதால் அடிக்கடி ஏர்போர்ட் போவேன். அப்போது அங்குள்ள கஸ்டம்ஸ் ஆபிசருக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது என்று கூறினான். உடனே நான் என்னிடம் 24 லட்சம் பணம் இல்லை என்று கூறினேன்.

ரெட்டி சார் நீங்க சென்னை வாங்க பொருளை பாத்திட்டு கொஞ்சம் கொஞ்சமாக வாங்கிட்டு போங்க என்று கூறினான். டைம் பார்த்து வருகிறேன் என்று கூறிவிட்டு போனை வைச்சிட்டேன். 12.07.2019ம் பிரைடே செல்வக்குமாருக்கு போன் செய்து செல்வா சார், உனக்கு சாடர்டே, சண்டே லீவு இருக்கு வரவா சார் என்று கேட்டேன். அரைமணி நேரம் வெயிட் பண்ணுங்க நான் கேட்டுட்டு கூப்பிடுவேன் என்று கூறினான். அரைமணி நேரம் கழித்து செல்வகுமார் எனக்கு போன் செய்து ஒண்ணும் பிரச்சனை இல்லை.

நாளைக்கு நீங்க 10.00மணிக்கு சென்னை ஏர்போர்ட் வந்து போன் பண்ணுங்க நான் சார் கிட்ட பேசிவிட்டேன் என்று கூறி போனை வைத்து விட்டான். 13.07.2019ம் சாடர்டே அதிகாலை 04.00மணிக்கு எனது ஒனருக்கு சொந்தமான KA-05-ML-2610 என்ற CRUZE காரை எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பி 9.45 மணிக்கு ஏர்போர்ட்க்கு வந்துவிட்டேன். பின் செல்வகுமாருக்கு போன் பண்ணி செல்வா சார் நான் இங்கு வந்து விட்டேன் என்று கூறினேன். அதற்கு செல்வகுமார், சார் டிராபிக் ஹெவியா இருக்கு நான் வருவதற்கு அரைமணி நேரமாகிவிடும் என்று கூறினார். அதற்கு நான் சரி சார் நான் வெயிட் பண்றேன் என்று கூறிவிட்டு போனை வைச்சிட்டேன். 10.20க்கு செல்வகுமார் எனக்கு சார் நான் மெட்ரோ இரயில்வே ஸ்டேசன் முன்னாடி இருக்கிறேன். நீங்க அங்கு வந்து போன் பண்ணுங்க என்று கூறி போனை வைச்சிட்டேன்.

நான் உடனே எனது காரில் மெட்ரோ இரயில்வே ஸ்டேசன் அருகே 10.30 மணிக்கு சென்று செல்வக்குமாருக்கு போன் பண்ணி செல்வா சார் நான் மெட்ரோ இரயில்வே ஸ்டேசன் எதிரேயுள்ள ரோட்டில் ஒயிட் கலர் காரில் இருக்கிறேன் என்று கூறினேன். உடனே செல்வகுமார் சரி சார் நான் வருகிறேன் என்று கூறி விட்டு சிறிது நேரத்தில் செல்வகுமார் அங்கு வந்து எனது காரில் முன் பக்கத்தில் ஏறினான். உடனே எனது காரில் பின் பக்கத்தில் பெயர் முகவரி தெரியாத ஐந்து பேர் ஏறினார்கள். உடனே அவர்கள் யார் என்று செல்வகுமாரிடம் கேட்க தனது நண்பர்களான செந்தட்டியைச் சேர்ந்த முத்துக்குமார், ஆலங்குளத்தைச் சேர்ந்த சதீஸ், மாரியப்பன், கணபதிபட்டியைச் சேர்ந்த மாடசாமி சென்னையைச் சேர்ந்த லக்சுமணன் என்று கூறினார்.

பின்னர் திடீரென்று பின்னால் உட்கார்ந்த ஐந்து பேரும் டேய் ஒழுங்கா உடகார என்று கூறி விட்டு அவர்கள் கொண்டு வந்த சிவப்பு கலர் காரைப்பொடியை தூக்கி என் மூஞ்சில் போட்டு விட்டு என்னை தூக்கி பின்னால் போட்டு என்னை நிலைகுலையை வைத்து விட்டு அந்த ஐந்து பேரில் மாரியப்பன் என்பவர் அரிவாள் முனையில் பையில் வைத்திருந்த பணம் ரூ.23000ம் கழுத்தில் போட்டிருந்த 13 கிராம் தங்க கழுத்து செயின் ஒன்று மூன்று தங்க மோதிரம் சுமார் 21 கிராம், கேசே என்ற வாட்ச், இரண்டு சாம்சங் மொபைல் மற்றும் பர்ஸை பிடிங்கினார்கள். காரின் பின் சீட்டில் இருந்த ஐந்து பேர்களும் சேர்ந்து கை மற்றும் கம்பால் முதுகு, முகம் இடது கையில் அடித்தார்கள். அடித்ததில் எனக்கு முதுகு, இடது கையில் காயமும், மேல் உதட்டில் இரத்தகாயமும் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் கொண்டு வந்த அரிவாள் மற்றும் கம்பி காண்பித்து நாங்கள் சொல்வதை கேட்டால் உனக்கு பிரச்சனை இல்லை. இல்லைனா இந்த அரிவாளை எடுத்து கொன்று விடுவோம் என்று மிரட்டினார்கள். பர்ஸில் மூன்று ஏடி.எம்.கார்டு, டிரைவிங் லைசன்ஸ், ஆதார்கார்டு, பேன்கார்டு இருந்தது. தங்க நகைகளின் மதிப்பு சுமார் 1லட்சம் இருக்கும். அப்போது முத்துக்குமார் காரை ஒட்டி13.07.2019ம் இரவு 10 மணிக்கு இடம் தெரியாத செட்டிற்கு கொண்டு சென்றனர். பின்னர் சதிஷ், காலையில் நாங்க என்ன சொல்றோம் அதை மட்டும் கேளு என்று கூறி தோசை வாங்கி கொடுத்தாங்க நான் சாப்பிட்டு செட்டுலே தூங்கிட்டேன்.

14.07.2019ம் காலையில் 9 மணிக்கு இட்லி வாங்கி கொடுத்தாங்க சாப்பிட்டு அங்கிருந்த காரில் கிளம்பி என்னை பெயர் தெரியாத காட்டில் தனியாக இருக்க கூடிய வீட்டிற்கு சுமார் காலை 9.30 மணிக்கு அழைத்து சென்றார்கள். அப்போது பின்னர் விலாசம் கேட்டு தெரிந்த ஆட்கொண்டார்குளம் வசந்த் மற்றும் இலந்தகுளம் சிங்கத்துரை இருவரும் TN-79-D-8096 என்ற ஹோண்டா டிரிம் டூவிலரில் அங்கு வந்தாங்க. எட்டுபேரும் சேர்ந்து காரில் ஏற்றி காட்டிற்கு அழைத்து சென்றார்கள். அதில் சதிஷ் என்னிடம் போனை கொடுத்து 30 லட்சம் கேட்டு போன் பண்ணி சொல்லு என்று கூறினார். உடனே நான் எனது அண்ணா வெங்கட்ராம் ரெட்டிக்கு போன் பண்ணி தெலுங்கில் 30 லட்சம் வேனும் என்று கேட்டேன்.

உடனே தெலுங்கு தெரிந்த மாடசாமி போனை கட் பண்ணு என்று கூற நான் உடனே போனை கட் பண்ண, மாடசாமி என்னிடம் நான் வேறு ஒருவருக்கு கடன் கொடுக்க வேண்டியிருக்கு அதனை திருப்பி கொடுக்கனும் கூறி கேளு என்று கூறினார். உடனே அண்ணாவிற்கு போன் பண்ணி வேறு ஒருவருக்கு 30 லட்சம் கொடுக்கனும் என்று தெலுங்கில் பேசினேன். உடனே என் அண்ணா சாயங்காலம் போன் பண்ணு எவ்ளோ ரெடியாகுதுனு பாத்திட்டு சொல்றேன் என்று கூறினார். மதியம் 12.00க்கு சாப்பாடு வாங்கி வந்து சாப்பாடு கொடுத்தாங்க சாப்பிட்டேன். மாலை 3.30க்கு செல்வக்குமார் போனை கொடுத்து என் அண்ணாவுக்கு பேசு என்று கூறினார். நான் போனை வாங்கி எனது அண்ணாவுக்கு போன் பண்ணி காசு ரெடியாகிட்டா என்று கேட்டேன். அதற்கு தெலுங்கில் கூறினார். இருக்கிற நகை எல்லாம் வச்சா அஞ்சு லட்சம் தான் வருது என்று தெலுங்கில் கூறினார். வசந்த் என் அக்காவுண்டில் 1 லட்சம் போட்டு விடச்சொல்லு என்று கூறினார்.


உடனே எனது அக்கவுண்ட்டிற்கு எனது அண்ணா 1 லட்சம் போட்டார். அதில் எனது மொபைலை எடுத்து ரூ.49000யை அவரது அக்கவுண்ட்டிற்கு டிரான்ஸ்பர் பண்ணினார். மறு நாள் காலையில் எனது அக்கவுண்ட் நம்பர் தாரேன். அதில் நாலு லட்சம் போடு என்று கூறினார். சாயங்காலம் சுமார் 05.30க்கு எட்டு பேரும் காரில் என்னை ஏற்றினார்கள், அதில் வசந்த், சிங்கத்துரை இருவரும் டூவிலரில் வந்தார்கள், மற்ற ஆறு பேரும் சேர்ந்து என்னை பின்னர் ஊர் பெயர் கேட்டு தெரிந்த நெல்லை மாவட்டம் சேர்ந்தமரம் பஜார் கே.ஆர்.டி. காய்கறி கடை முன்புள்ள ரோட்டில் வாகனத்தை நிறுத்தினார்கள். அப்போது காரை ஒட்டி வந்த முத்துக்குமாரையும் என்னையும் காரில் இருக்க வைத்து விட்டு மற்ற ஐந்து பேரும் பின்னால் பைக்கில் வந்த இருவரும் சேர்ந்து ஏழு பேரும் டீ மற்றும் தம் அடிக்க இறங்கினார்கள். அப்போது நான் காரில் இருந்து இறங்கி கே.ஆர்.டி. காய்கறி கடைக்குள் ஒடினேன். காரில் இருந்த முத்துக்குமார் என் பின்னால் ஒடி வந்தார். நான் காய்கறி கடைக்காரரிடம், சார் காப்பாத்துங்க காப்பாத்துங்க போலீசை கூப்பிடுங்க என்று கூறினேன். அப்போது தம் அடித்துக் கொண்டிருந்த மாடசாமி, சதிஷ் இருவரும் கடைக்குள் வந்தனர். சிங்கத்துரையும், வசந்த் இருவரும் அவர்கள் வந்த கடைக்குள் ஆட்கள் கூடுவதை பார்த்ததும் அவர்கள் வந்த KA-05-ML-2610 என்ற காரில் ஏறி தப்பி ஒடி விட்டார்கள். பின்னர் தகவல் தெரிந்து வந்த போலீசார் நான் காயத்துடன் இருப்பதை பார்த்ததும் பின்னர் ஊர் பெயர் கேட்டு தெரிந்த சங்கரன்கோவில் அரசு மருத்துமனைக்கு அழைத்து சென்றார்கள்.

டாக்டர் என்ன விசாரிக்க நான் நடந்த சம்பவத்தை கூறினேன். டாக்டர் என்னை பரிசோதித்து இன்சக்சன் போட்டார். சிகிச்சைக்கு பின்பு மேற்படி நடந்த சம்பவத்தை எனது அப்பா கிருஷ்ணாரெட்டி, அண்ணன் வெங்கட்ரமன் ரெட்டி மற்றும் எனது ஒனர் ஆர்.டி. மணி ஆகியோருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தேன். பின் அங்கிருந்து போலீசார் என்னை சேர்ந்தமரம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தார்கள். மேற்படி நடந்த சம்பவம் குறித்து சேர்ந்தமரம் போலீசார் என்னை விசாரிக்க நான் நடந்த சம்பவத்திற்கு நடவடிக்கை எடுக்கவேண்டி வாக்குமூலம் கொடுத்தேன். படித்து காண்பிக்க நான் சொன்னபடி சரியாக இருந்தது. நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு ராமன்ஜோல் ரெட்டி. என்று போலீசாரிடம் சொல்லியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT