ுபர

ஆந்திர மாநில தொழில்துறை அமைச்சர் மாரடைப்பால் பலியான சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

ஆந்திர மாநிலத்தில் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக இருப்பவர் மேகபதி கவுதம் ரெட்டி. ஜெகன் அமைச்சரவையில் மிகவும் ஆக்டிவ் அமைச்சர் என்ற பெயருக்கு சொந்தக்காரரான இவர், கடந்த ஒருவாரமாக துபாயில் தங்கி, ஆந்திர மாநிலத்திற்கான புதிய திட்டம் தொடர்பான தொழிலதிபர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வந்துள்ளார்.தினசரி அவர்களோடு மீட்டிங்கில் கலந்துகொண்டு வந்த அவருக்கு, இன்று அதிகாலைதிடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு அதிகாரிகள் மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு சென்ற நிலையிலும் அவரை காப்பாற்ற முடியவில்லை. இந்நிலையில் அவரின் மறைவுக்கு மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.