Advertisment

ஆந்திராவில் தமிழகத்தைச் சேர்ந்த காதல் ஜோடி ரயில் முன் பாய்ந்து தற்கொலை

andhra - Love couple - Train - suicide

Advertisment

ஆந்திர மாநிலத்தில் ரயின் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்து கொண்டவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆந்திர மாநிலம் குப்பம் ரயில் நிலையத்தில் காதல் ஜோடி ரயின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். தற்கொலை செய்து கொண்டவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அங்கு அவர்கள் எடுத்து வந்த பை கிடந்தது. அந்தப் பையில் அடையாள அட்டை கிடைத்தது. அதனை பார்க்கும்போது அவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. வேலூர் மாவட்டம், ஆற்காட்டை சேர்ந்த மகாலட்சமி, ஊத்துக்கோட்டையை சேர்ந்த ஹேமந்த் ஆகியோர் என தெரிய வந்தது.

காதலுக்கு எதிர்ப்பு வந்ததால் தற்கொலை செய்து கொண்டார்களா? வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்றும், இதுகுறித்து சம்மந்தப்பட்ட ஊர்களில் உள்ளவர்களிடம் விசாரித்து தகவல் சொல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆந்திர போலீசார் தெரிவிக்கின்றனர்.

Andhra couple love police Suicide Tamilnadu Train
இதையும் படியுங்கள்
Subscribe