Skip to main content

கடத்தப்பட்ட ஆந்திர தொழிலதிபரின் பதறடிக்கும் டைம் – டூ – டைம் வாக்குமூலம்

Published on 17/07/2019 | Edited on 17/07/2019

மலிவு விலையில் கடத்தல் தங்கம் இருப்பதாகச் சொல்லி ஆந்திராவின் தொழிலதிபர் ராம்ஜோல் ரெட்டியைக் (28) கடத்தி, பணம் நகை பறித்த, நெல்லை மாவட்டத்தின் ஆட்கொடண்டார்குளத்தின் கடத்தல் கும்பலின் முத்துக்குமார் மற்றும் வசந்தகுமார் 2 பேர் சிக்கினர். கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்களை வளைத்து ராம்ஜோல் ரெட்டியை மீட்ட சேர்ந்தமரம் இன்ஸ்பெக்டர் பாலசந்தரிடம், அவர் கொடுத்த பரபரப்பு வாக்கு மூலம்…

 

v

 

எனது சொந்த மாநிலம் ஆந்திர பிரதேசம் சித்தூர் மாவட்டம், தம்பாலபள்ளி மண்டலம், பி.கொத்தகோட்டா கிராமத்தில் எனது பெற்றோர்களுடன் குடியிருந்து வருகிறேன். பெங்களூர் பானஸ்பாடியில் ஜி.ஆர்.கன்சல்டிங்கில் கடந்த எட்டு வருடமாக வேலை செய்து வருகிறேன். என்னுடன் பிறந்தது வெங்கட்ரமணன் ரெட்டி, லக்கநாராயணன் ரெட்டி ஆகிய இரண்டு அண்ணன்கள் இருக்கிறார்கள். 

 

எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. எனக்கு தெலுங்கு, கன்னடா, ஹிந்தி, இங்கிலீஸ் ஆகிய ஐந்து மொழிகளில் பேசத்தெரியும்.  ஆனால் எழுத தெரியாது, தமிழ்நாடு மாநிலம் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வக்குமார் கடந்த ஐந்து வருடங்களுக்கு பெங்களூருக்கு வேலை தேடி வந்தார். செல்வக்குமாருக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டு நண்பர்களாக பழகி வந்தோம். ஆறு மாத காலம் பெங்ளூரில் வேலை செய்து விட்டு செல்வக்குமார் அவனது சொந்தமான மாநிலத்திற்கு சென்று விட்டான்.

 

 செல்வக்குமார் அடிக்கடி என்னிடம் போனில் பேசுவான்.  நான் எனது சொந்த வேலையாக சென்னைக்கு வந்தால் செல்வகுமாருக்கு போன் செய்வேன் அவனும் வருவான். ஹோட்டலுக்கு சென்று சாப்பிடுவோம் பின்னர் அவரவர் வேலை பார்த்து சென்று விடுவோம். 29.06.2019ம் மாலை செல்வக்குமார் எனக்கு போன் செய்து ஒரு டீல் பண்ணலாம் என்று கேட்டான். அதற்கு நான் என்ன டீல் என்று கேட்டேன். எனக்கு கஸ்டம்ஸ் ஆபிசரை நல்லா தெரியும் அவரிடமிருந்து 1 கிலோ கோல்டு 24 லட்சத்திற்கு வாங்கி தருவதாக சொன்னான். உடனே நான் கஸ்டம்ஸ் ஆபீசரை எப்படி தெரியும்?. என்று கேட்டேன், அதற்கு நான் பிலிம் இன்ஸ்ட்டிரியில் வேலை செய்து வருவதால் அடிக்கடி ஏர்போர்ட் போவேன். அப்போது அங்குள்ள கஸ்டம்ஸ் ஆபிசருக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது என்று கூறினான். உடனே நான் என்னிடம் 24 லட்சம் பணம் இல்லை என்று கூறினேன். 

 

ரெட்டி சார் நீங்க சென்னை வாங்க பொருளை பாத்திட்டு கொஞ்சம் கொஞ்சமாக வாங்கிட்டு போங்க என்று கூறினான். டைம் பார்த்து வருகிறேன் என்று கூறிவிட்டு போனை வைச்சிட்டேன். 12.07.2019ம் பிரைடே செல்வக்குமாருக்கு போன் செய்து செல்வா சார், உனக்கு சாடர்டே, சண்டே லீவு இருக்கு வரவா சார் என்று கேட்டேன். அரைமணி நேரம் வெயிட் பண்ணுங்க நான் கேட்டுட்டு கூப்பிடுவேன் என்று கூறினான். அரைமணி நேரம் கழித்து செல்வகுமார் எனக்கு போன் செய்து ஒண்ணும் பிரச்சனை இல்லை. 

 

 நாளைக்கு நீங்க 10.00மணிக்கு சென்னை ஏர்போர்ட் வந்து போன் பண்ணுங்க நான் சார் கிட்ட பேசிவிட்டேன் என்று கூறி போனை வைத்து விட்டான். 13.07.2019ம் சாடர்டே அதிகாலை 04.00மணிக்கு எனது ஒனருக்கு சொந்தமான KA-05-ML-2610 என்ற CRUZE காரை எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பி 9.45 மணிக்கு ஏர்போர்ட்க்கு வந்துவிட்டேன். பின் செல்வகுமாருக்கு போன் பண்ணி செல்வா சார் நான் இங்கு வந்து விட்டேன் என்று கூறினேன். அதற்கு செல்வகுமார், சார் டிராபிக் ஹெவியா இருக்கு நான் வருவதற்கு அரைமணி நேரமாகிவிடும் என்று கூறினார். அதற்கு நான் சரி சார் நான் வெயிட் பண்றேன் என்று கூறிவிட்டு போனை வைச்சிட்டேன். 10.20க்கு செல்வகுமார் எனக்கு சார் நான் மெட்ரோ இரயில்வே ஸ்டேசன் முன்னாடி இருக்கிறேன். நீங்க அங்கு வந்து போன் பண்ணுங்க என்று கூறி போனை வைச்சிட்டேன். 

 

நான் உடனே எனது காரில் மெட்ரோ இரயில்வே ஸ்டேசன் அருகே 10.30 மணிக்கு சென்று செல்வக்குமாருக்கு போன் பண்ணி செல்வா சார் நான் மெட்ரோ இரயில்வே ஸ்டேசன் எதிரேயுள்ள ரோட்டில் ஒயிட் கலர் காரில் இருக்கிறேன் என்று கூறினேன். உடனே செல்வகுமார் சரி சார் நான் வருகிறேன் என்று கூறி விட்டு சிறிது நேரத்தில் செல்வகுமார் அங்கு வந்து எனது காரில் முன் பக்கத்தில் ஏறினான். உடனே எனது காரில் பின் பக்கத்தில் பெயர் முகவரி தெரியாத ஐந்து பேர் ஏறினார்கள். உடனே அவர்கள் யார் என்று செல்வகுமாரிடம் கேட்க தனது நண்பர்களான செந்தட்டியைச் சேர்ந்த முத்துக்குமார், ஆலங்குளத்தைச் சேர்ந்த சதீஸ், மாரியப்பன், கணபதிபட்டியைச் சேர்ந்த மாடசாமி சென்னையைச் சேர்ந்த லக்சுமணன் என்று கூறினார். 

 

பின்னர் திடீரென்று பின்னால் உட்கார்ந்த ஐந்து பேரும் டேய் ஒழுங்கா உடகார என்று கூறி விட்டு அவர்கள் கொண்டு வந்த சிவப்பு கலர் காரைப்பொடியை தூக்கி என் மூஞ்சில் போட்டு விட்டு என்னை தூக்கி பின்னால் போட்டு என்னை நிலைகுலையை வைத்து விட்டு அந்த ஐந்து பேரில் மாரியப்பன் என்பவர் அரிவாள் முனையில் பையில் வைத்திருந்த பணம் ரூ.23000ம் கழுத்தில் போட்டிருந்த 13 கிராம் தங்க கழுத்து செயின் ஒன்று மூன்று தங்க மோதிரம் சுமார் 21 கிராம், கேசே என்ற வாட்ச், இரண்டு சாம்சங் மொபைல் மற்றும் பர்ஸை பிடிங்கினார்கள். காரின் பின் சீட்டில் இருந்த ஐந்து பேர்களும் சேர்ந்து கை மற்றும் கம்பால் முதுகு, முகம் இடது கையில் அடித்தார்கள். அடித்ததில் எனக்கு முதுகு, இடது கையில் காயமும், மேல் உதட்டில் இரத்தகாயமும் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் கொண்டு வந்த அரிவாள் மற்றும் கம்பி காண்பித்து நாங்கள் சொல்வதை கேட்டால் உனக்கு பிரச்சனை இல்லை. இல்லைனா இந்த அரிவாளை எடுத்து கொன்று விடுவோம் என்று மிரட்டினார்கள். பர்ஸில் மூன்று ஏடி.எம்.கார்டு, டிரைவிங் லைசன்ஸ், ஆதார்கார்டு, பேன்கார்டு இருந்தது. தங்க நகைகளின் மதிப்பு சுமார் 1லட்சம் இருக்கும். அப்போது முத்துக்குமார் காரை ஒட்டி13.07.2019ம் இரவு 10 மணிக்கு இடம் தெரியாத செட்டிற்கு கொண்டு சென்றனர். பின்னர் சதிஷ், காலையில் நாங்க என்ன சொல்றோம் அதை மட்டும் கேளு என்று கூறி தோசை வாங்கி கொடுத்தாங்க நான் சாப்பிட்டு செட்டுலே தூங்கிட்டேன்.

 

 14.07.2019ம் காலையில் 9 மணிக்கு இட்லி வாங்கி கொடுத்தாங்க சாப்பிட்டு  அங்கிருந்த காரில் கிளம்பி என்னை பெயர் தெரியாத காட்டில் தனியாக இருக்க கூடிய வீட்டிற்கு சுமார் காலை 9.30 மணிக்கு அழைத்து சென்றார்கள். அப்போது பின்னர் விலாசம் கேட்டு தெரிந்த ஆட்கொண்டார்குளம் வசந்த் மற்றும் இலந்தகுளம் சிங்கத்துரை இருவரும் TN-79-D-8096 என்ற ஹோண்டா டிரிம் டூவிலரில் அங்கு வந்தாங்க. எட்டுபேரும் சேர்ந்து காரில் ஏற்றி காட்டிற்கு அழைத்து சென்றார்கள். அதில் சதிஷ் என்னிடம் போனை கொடுத்து 30 லட்சம் கேட்டு போன் பண்ணி சொல்லு என்று கூறினார். உடனே நான் எனது அண்ணா வெங்கட்ராம் ரெட்டிக்கு போன் பண்ணி தெலுங்கில் 30 லட்சம் வேனும் என்று கேட்டேன்.

 

 உடனே தெலுங்கு தெரிந்த மாடசாமி போனை கட் பண்ணு என்று கூற நான் உடனே போனை கட் பண்ண, மாடசாமி என்னிடம் நான் வேறு ஒருவருக்கு கடன் கொடுக்க வேண்டியிருக்கு அதனை திருப்பி கொடுக்கனும் கூறி கேளு என்று கூறினார். உடனே அண்ணாவிற்கு போன் பண்ணி வேறு ஒருவருக்கு 30 லட்சம் கொடுக்கனும் என்று தெலுங்கில் பேசினேன். உடனே என் அண்ணா சாயங்காலம் போன் பண்ணு எவ்ளோ ரெடியாகுதுனு பாத்திட்டு சொல்றேன் என்று கூறினார். மதியம் 12.00க்கு சாப்பாடு வாங்கி வந்து சாப்பாடு கொடுத்தாங்க சாப்பிட்டேன். மாலை 3.30க்கு செல்வக்குமார் போனை கொடுத்து என் அண்ணாவுக்கு பேசு என்று கூறினார். நான் போனை வாங்கி எனது அண்ணாவுக்கு போன் பண்ணி காசு ரெடியாகிட்டா என்று கேட்டேன். அதற்கு தெலுங்கில் கூறினார். இருக்கிற நகை எல்லாம் வச்சா அஞ்சு லட்சம் தான் வருது என்று தெலுங்கில் கூறினார். வசந்த் என் அக்காவுண்டில் 1 லட்சம் போட்டு விடச்சொல்லு என்று கூறினார். 


உடனே எனது அக்கவுண்ட்டிற்கு எனது அண்ணா 1 லட்சம் போட்டார். அதில் எனது மொபைலை எடுத்து ரூ.49000யை அவரது அக்கவுண்ட்டிற்கு டிரான்ஸ்பர் பண்ணினார். மறு நாள் காலையில் எனது அக்கவுண்ட் நம்பர் தாரேன். அதில் நாலு லட்சம் போடு என்று கூறினார். சாயங்காலம் சுமார் 05.30க்கு எட்டு பேரும் காரில் என்னை ஏற்றினார்கள், அதில் வசந்த், சிங்கத்துரை இருவரும் டூவிலரில் வந்தார்கள், மற்ற ஆறு பேரும் சேர்ந்து என்னை பின்னர் ஊர் பெயர் கேட்டு தெரிந்த நெல்லை மாவட்டம் சேர்ந்தமரம் பஜார் கே.ஆர்.டி. காய்கறி கடை முன்புள்ள ரோட்டில் வாகனத்தை நிறுத்தினார்கள். அப்போது காரை ஒட்டி வந்த முத்துக்குமாரையும் என்னையும் காரில் இருக்க வைத்து விட்டு மற்ற ஐந்து பேரும் பின்னால் பைக்கில் வந்த இருவரும் சேர்ந்து ஏழு பேரும் டீ மற்றும் தம் அடிக்க இறங்கினார்கள். அப்போது நான் காரில் இருந்து இறங்கி கே.ஆர்.டி. காய்கறி கடைக்குள் ஒடினேன். காரில் இருந்த முத்துக்குமார் என் பின்னால் ஒடி வந்தார். நான் காய்கறி கடைக்காரரிடம், சார் காப்பாத்துங்க காப்பாத்துங்க போலீசை கூப்பிடுங்க என்று கூறினேன். அப்போது தம் அடித்துக் கொண்டிருந்த மாடசாமி, சதிஷ் இருவரும் கடைக்குள் வந்தனர். சிங்கத்துரையும், வசந்த் இருவரும் அவர்கள் வந்த கடைக்குள் ஆட்கள் கூடுவதை பார்த்ததும் அவர்கள் வந்த KA-05-ML-2610 என்ற காரில் ஏறி தப்பி ஒடி விட்டார்கள். பின்னர் தகவல் தெரிந்து வந்த போலீசார் நான் காயத்துடன் இருப்பதை பார்த்ததும் பின்னர் ஊர் பெயர் கேட்டு தெரிந்த சங்கரன்கோவில் அரசு மருத்துமனைக்கு அழைத்து சென்றார்கள். 

 

டாக்டர் என்ன விசாரிக்க நான் நடந்த சம்பவத்தை கூறினேன். டாக்டர் என்னை பரிசோதித்து இன்சக்சன் போட்டார். சிகிச்சைக்கு பின்பு மேற்படி நடந்த சம்பவத்தை எனது அப்பா கிருஷ்ணாரெட்டி, அண்ணன் வெங்கட்ரமன் ரெட்டி மற்றும் எனது ஒனர் ஆர்.டி. மணி ஆகியோருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தேன். பின் அங்கிருந்து போலீசார் என்னை சேர்ந்தமரம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தார்கள். மேற்படி நடந்த சம்பவம் குறித்து சேர்ந்தமரம் போலீசார் என்னை விசாரிக்க நான் நடந்த சம்பவத்திற்கு நடவடிக்கை எடுக்கவேண்டி வாக்குமூலம் கொடுத்தேன். படித்து காண்பிக்க நான் சொன்னபடி சரியாக இருந்தது. நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு ராமன்ஜோல் ரெட்டி. என்று போலீசாரிடம் சொல்லியுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எனக்கு பல நிறுவனங்கள் இருப்பதால் யார் மேனேஜர் என்றே தெரியாது'-மழுப்பிய நயினார் நாகேந்திரன்

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.

இத்தகைய சூழலில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளை பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டி ஏ-1 26, 27, 28 ஆகிய இருக்கைகளில் நயினார் நாகேந்திரன் கோட்டாவில் அவர்கள் பயணித்தது தெரியவந்தது. திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு இந்த பணத்தை கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், கைது செய்யப்பட்ட மூவர் மீதும் தேர்தல் பறக்கும் படை அளித்த புகாரின் பேரில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

nn

இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான இடங்களில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நெல்லையில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் நெருங்கிய ஆதரவாளர் கணேஷ்மணி என்பவர் வீட்டில் இரண்டு லட்சம் ரூபாய் பணம் சிக்கியுள்ளது. வாக்காளர்களுக்கு கொடுக்கப்படுவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 வேட்டிகள், 44 நைட்டிகள் உள்ளிட்ட பரிசு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் மது பாட்டில்களும் சிக்கியதாக பறக்கும் படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நயினார் நாகேந்திரன் தங்கும் ஹோட்டல் அறையிலும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை புரசைவாக்கம் ப்ளூ டைமண்ட் ஹோட்டலில் அவர் தங்கும் அறையிலும் சோதனையானது நடைபெற்று வருகிறது. நாகேந்திரனுக்கு தொடர்புடைய வண்ணாரப்பேட்டையில் உள்ள லட்சுமி காயத்ரி ஹோட்டல் உரிமையாளர் குணசேகரன் வீட்டிலும் 3.72 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கணக்கில் வராத பணம் மட்டுமின்றி ஏராளமான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

தொடர்ச்சியாக நயினார் நாகேந்திரனுக்கு தொடர்புடைய இடங்களில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் திமுகவும் இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. இதனால் தேர்தலில் போட்டியிட நயினார் நாகேந்திரனுக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், 'எனக்கு வேண்டியவர்கள் நிறைய பேர் இருக்காங்க. அவங்க அவரவர்கள் தொழிலுக்காக பணத்தை வைத்திருப்பார்கள். எனக்கு தொடர்புடைய இடங்களில் பணம் பறிமுதல் செய்யப்படவில்லை. எனக்கு பல நிறுவனங்கள் இருப்பதால் யார் மேனஜர் என்றே தெரியாது' என பதிலளித்துள்ளார்.

 

 

Next Story

ரவுடிகளின் அட்ராசிட்டி; தொழிலாளி வெட்டிக் கொலை - ரவுடி மீது துப்பாக்கிச் சூடு

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
shoot on rowdy in nellai
சந்துரு- பேச்சித்துரை

நெல்லை மாவட்டத்தின் வீரவநல்லூர் பகுதி அருகே உள்ளது தென்திருப்புவனம் கிராமம். இங்குள்ள காளி என்பவரின் மகன் 23 வயதேயான பேச்சித்துரை. நேற்றைய தினம் மாலை பேச்சித்துரையும், தன் நண்பரான கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த சந்துருவும், மதுவுடன் கஞ்சாவையும் சேர்த்தடித்தவர்களுக்குப் போதை உச்சந்தலைக்கு ஏறியிருக்கிறது.

போதையில் கண்மண் தெரியாமல் சாலையில் சென்ற பேச்சிதுரையும், சந்துருவும் வீரவநல்லூரையடுத்த வெள்ளங்குளியில் சிலருடன் தகராறு செய்து மிரட்டியுள்ளனர். பின்பு நெல்லை - அம்பை நெடுஞ்சாலையில் வெள்ளாங்குழிப் பகுதியில், பால வேலையில் ஈடுபட்டிருந்த கட்டுமானத் தொழிலாளர்களிடம் வம்பிற்கு இழுத்து பிரச்சினை செய்திருக்கிறார்கள். வாய்க்கு வந்தபடி பேசி வீண் தகராறு செய்தவர்கள் அந்த வழியாகச் சென்ற காரை நிறுத்தி அதன் கண்ணாடியை உடைக்க காரில் வந்தவர்கள் அலறித் தப்பியிருக்கிறார்கள்.

shoot on rowdy in nellai

பின்பு மறுபடியும் பாலக்கட்டுமானப் பக்கம் சென்றவர்கள் மீண்டும் தொழிலாளர்களிடம் வம்புத் தகராறு செய்ய, அங்கு பணியிலிருந்த மேஸ்திரியான விருதுநகர் மாவட்டம் சாத்துரைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர் அவர்களைக் கண்டித்திருக்கிறார். இதனால் ஆத்திரமான பேச்சித்துரையும் சந்துருவும் சேர்ந்து அரிவாளால் கருப்பசாமியை வெட்டியிருக்கிறார்கள். இதில் கருப்பசாமியின் பின் தலையில் ஆழமான வெட்டு விழ ரத்தம் பீறிட கதறி வீழ்ந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வெட்டுச்சம்பவம் நடக்கும்போதே அதனைத் தடுக்கப் பாய்ந்த சக தொழிலாளருமான மூலச்சி கிராமத்தின் வெங்கடேஷ் என்பவரை அரிவாளால் தாக்கியவர்கள் அங்கிருந்து பைக்கில் தப்பியிருக்கிறார்கள்.

வெள்ளாங்குழி வழியாகச் சென்ற இருவரும் எதிரேவந்த வீரவநல்லூர் செல்லும் அரசுப் பேருந்தை அரிவாட்கள் முனையில் நிறுத்தியவர்கள் கண்ணாடியை உடைத்து டிரைவரையும் வெளியே இழுத்துப் போட்டு வெட்ட முயன்றுள்ளனர். அப்போது மிரண்டு போன பயணிகளில் சிலர் சுதாரித்துக் கொண்டு அதனைத் தடுக்க முயன்றிருக்கிறார்கள். வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு உயிரைக் காப்பாற்ற ஓடிய டிரைவரை இரண்டு பேர்களும் அரை கிலோ மீட்டர் தொலைவு வரை அரிவாட்களால் ஓங்கிய படியே துரத்திச் சென்றிருக்கிறார்கள். மாலை நேரம் அந்தச் சாலையே இதனால் பதட்டமாகியிருக்கிறது. ஆனாலும் வெறியில்  கத்தியபடியே இருவரும் தாமிரபரணி ஆற்றுக்கரையை நோக்கிப் போன தகவல் வீரவநல்லூர் போலீசுக்குத் தெரியவர, தாமதம் செய்யாமல் காவலர் செந்தில்குமாரும், மற்றொரு காவலரும் பைக்கில் அவர்களைப் பிடிப்பதற்காக விரைந்தனர்.

ஆற்றாங்கரையோரம் அவர்களை போலீசார் இருவரும் மடக்கிபிடிக்க முயற்சி செய்த போது, எதிர்பாராத வகையில், இருவரும் மூர்க்கத்தனமாக காவலர் செந்தில்குமாரை மடக்கி அரிவாளால் அவரின் கையை வெட்டிவிட்டுத் தப்பியிருக்கிறார்கள். சக காவலர் உட்பட சிலர் காயமடைந்த காவலர் செந்தில்குமாரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

shoot on rowdy in nellai

காவலர் வெட்டப்பட்டது ரவுடிகளின் அட்டகாசம் பற்றிய தகவல் மாவட்ட எஸ்.பி.யான சிலம்பரசனுக்குத் தெரியவர உடனடியாக அவர் தன்னுடைய தனிப்படையை அனுப்பியிருக்கிறார்.

தாமிரபரணிக் கரையில் பதுங்கிய அவர்களை தனிப்படையினர் தேடி சலித்தெடுத்ததில் அவர்கள் முக்கூடல் பக்கமுள்ள சாலையினருகேயுள்ள மருதூர் வாழைத் தோப்பில் பதுங்கியிருந்தது தெரியவர அவர்களை தனிப்படை ரவுண்ட்அப் செய்திருக்கிறது. அவர்களைப் பிடிக்க முயற்சி செய்த போது அவர்கள் தப்பியோடியிருக்கிறார்கள். விடாமல் துரத்திய தனிப்படையினர் எச்சரித்தும் அவர்கள் தப்பியோட பேச்சித்துரையின் காலில் சுட்டுப் பிடித்திருக்கிறார்கள். இதில் அவனது சகா சந்துரு லாவகமாகத் தப்பியோடியிருக்கிறான். ரவுடி பேச்சித்துரையை மீட்ட போலீசார் முக்கூடலின் அரசு மருத்துவமனையில் அனுமதிக்க அங்கு அவருடைய காலில் உள்ள குண்டு அகற்றப்பட்டிருக்கிறது. பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு பேச்சித்துரையை அனுப்பிவைத்திருக்கின்றனர்.

இதனிடையே சம்பவ இடத்தில் ஆய்வு செய்த மாவட்ட எஸ்.பி.யான சிலம்பரசன். தொடர்ந்து நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் காவலர் செந்தில் குமாரிடம் விசாரணை நடத்தியிருக்கிறார். வெள்ளாங்குழியில் காரை மறித்து தகராறு செய்தவர்கள் கருப்பசாமி என்பவரை வெட்டிக் கொலை செய்துவிட்டு ஸ்ரீ பத்மநல்லூர் பக்கம் பொது மக்களிடம் தகராறு செய்திருக்கிறார்கள் தற்காப்பிற்காக காவலர், பேச்சித்துரையின் காலில் சுட்டுப் பிடித்தனர். சந்துருவைக் கைது செய்திருக்கிறோம் என்றார் எஸ்.பி.

shoot on rowdy in nellai

இளவயதான பேச்சித்துரையும், சந்துருவும் நண்பர்கள். வேலையற்ற இவர்களிடம் போதைப் பழக்கம் தொற்றியிருக்கிறது. மதுவுடன் சேர்த்து கஞ்சா அடிக்கும் பழக்கம் ரெகுலராம். அதிலும் கஞ்சாவைக் கசக்கி விட்டால் பேச்சித்துரைக்கு போதை, உச்சிமண்டைக்கு ஏறி மூளையின் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிடுமாம். நாடி, நரம்பு, ரத்தம், புத்தி, சதைகளில் போதை ஏறி சைக்கோவாகவே மாறிவிடுவானாம் இதனால் தான், என்ன செய்கிறோம் என்று அவனுக்கே தெரியாமல் போய்விடுமாம். அந்த லெவலுக்குப் போனவன் வருவோர் போவோரிடம் வம்பிழுப்பது அடிதடி என்றாகி கொலை வரை போயிருக்கிறது. முக்கூடல், சேரன்மகாதேவி, வீரவநல்லூர் காவல் நிலையங்களில் பேச்சித்துரை மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி என பல்வேறு வழக்காகி காவல் நிலைய ரவுடி பேனலிலும் இடம் பிடித்துள்ளான். இந்த அடாவடி காரணமாக அடிக்கடி அரசு விருந்தாளியாகப் போய்வரும் ரவுடி பேச்சிதுரையின் மீது குண்டாசும் பாய்ந்திருக்கிறது என்கிறார் அந்தப் பகுதியின் மூத்த காவலர் ஒருவர்.

ரவுடி பேச்சித்துரையைப் போன்று இளம் வயதிலேயே போதைக்கு அடிமையாகி முக்கூடல், வீரவநல்லூர் மற்றும் சேரன்மகாதேவி சுற்றுப் பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இப்படி சீர்கெட்டுப் போயிருக்கிறார்கள் என்கிறார்கள் பகுதிவாசிகள்.