Advertisment

‘கம்பீரமாக நின்ற அரசமரம்; அடியோடு சாய்ந்ததால் மின்கம்பங்கள் சேதம்’ - இருளில் மூழ்கிய கிராமம்!

An ancient tree that stood majestically it fell completely damaging electricity poles 

புதுக்கோட்டை மாவட்டம்கீரமங்கலம்அருகில் உள்ளபனங்குளம்கிழக்குப் பகுதியில் சுமார் 100 ஆண்டுகள் பழமையான அரச மரம் கிராமத்தின் மையப் பகுதியில் சாலை ஓரம் நின்றது. பல புயல் காலங்களிலும் கம்பீரமாக நின்ற இந்த அரச மரம் இன்று (24.06.2025 - செவ்வாய்க்கிழமை) மாலை திடீரென அடியோடு சாய்ந்துள்ளது.

Advertisment

மரம் சாயும் போது அருகில் சென்றஉயரழுத்தமின் கம்பிகளில் விழுந்து சில மின்கம்பங்கள், மின் உபகரணங்களும் உடைந்து சேதமானது. இதனால் அந்தப் பகுதிக்கான மின்சாரம் நிறுத்தப்பட்டது. இந்த வழியாக மின்சாரம் செல்லும் 3 மின்மாற்றிகளுக்கான மின்சாரம்தடைப்பட்டுள்ளதால்அந்தப் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கும் மின்சாரம் இல்லாமல் கிராமத்தில் சில பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளது. இரவு நேரம் என்பதால் மின் பணிகள் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நாளை (25.06.2025) காலை புதிய மின்கம்பங்கள் நட்டு மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Advertisment
Keeramangalam pudukkottai tree village
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe