ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற அன்புமணியின் மகள் திருமணம்!

l

சென்னையில்நேற்று (1.09.2021) பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் - சரஸ்வதி தம்பதி ஆகியோரின் பெயர்த்தியும், முன்னாள் மத்திய சுகாதார அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி இராமதாஸ் - சௌமியா அன்புமணியின் மகளுக்குத் திருமணம் நடந்தது.

பாமகவின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸின் மகளான சங்கமித்ரா சௌமியா அன்புமணி, - சென்னை சோழிங்கநல்லூர் பூ. தனசேகரன் - கலைவாணி தனசேகரன் ஆகியோரின் மகன் த. ஷங்கர் பாலாஜி இணையரின் திருமணத்தை ராமதாஸ் தலைமை ஏற்று நேற்று (01.09.2021) நடத்தி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் மு. கிருஷ்ணசாமி, பாமக தலைவர் ஜி.கே. மணி, முன்னாள் மத்திய ரெயில்வே அமைச்சர் ஏ.கே. மூர்த்தி மற்றும் மணமகள் - மணமகன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

anbumani ramadoss Ramadoss
இதையும் படியுங்கள்
Subscribe