Advertisment

“தமிழகத்தில் கூட்டணி ஆட்சி; பாமக பங்கேற்கும்” - அன்புமணி

anbumani said In 2026, there will be a coalition government in Tamil Nadu

Advertisment

பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்க சட்டத் திருத்தம் செய்ய வேண்டும், ஓ.பி.சி பிரிவினருக்கு சிறப்புப் பணி நியமன தேர்வை நடத்த வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய பிற்படுத்தப்பட்ட ரயில்வே ஊழியர்(AIOBC) சங்கத்தின் சார்பில் நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று கலந்துகொண்டு உரையாற்றினார்.

கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ், “தமிழ்நாட்டில் உள்ள கடைநிலை ரயில்வே பணிகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என இந்த போராட்டம் நடைபெற்றது. ஓ.பி.சி. பிரிவினருக்கு நியாயம் வழங்க வேண்டும் எனத் தொடர்ந்து நாங்கள் போராடி வருகிறோம். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஆழமான கோரிக்கை இந்தியா முழுவதும் இருந்து வருகிறது. அதில் தமிழ்நாட்டில் அதிகமாக இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்ய வேண்டும் என்கிற வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருக்கிறது. அதற்கு ஒரே தீர்வு ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுத்து உச்சநீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். இல்லையெனில் அதை ரத்து செய்ய வேண்டிய ஒரு நிலை உருவாக வாய்ப்பு உள்ளது.

இதற்கு முன்னால் இருந்த முதலமைச்சர்கள் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் இல்லை என்று சொல்லவில்லை. தற்போதைய முதல்வர் தான் இப்படி கூறுகிறார். கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளார். ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்குப் போராடிக்கொண்டு இருக்கிறார். தமிழ்நாடு முழுவதும் இது போன்ற நிலைதான். சட்டம் ஒழுங்கு என்று ஒன்று தமிழ்நாட்டில் இல்லை. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 6 ஆயிரம் கொலை, 55 ஆயிரம் கொள்ளை சம்பவங்கள் தமிழ்நாட்டில் நடந்துள்ளது.

Advertisment

தமிழ்நாடு காவல்துறை ஸ்காட்லாந்து இணையான காவல்துறை என்பதெல்லாம் போய்விட்டது. வன்னியர் சங்கத் தலைவர் தலையை எடுப்பேன் என ஒரு நபர் மேடையில் பேசுகிறார். ஆனால் அவர் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. காவல்துறை கோழையாக உள்ளது. ஏன் காவல்துறை பயப்படுகிறது? மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும். அரசு இதில் மேலும் கவனம் செலுத்த வேண்டும். அரசு மெத்தனமாக உள்ளது.

ஆட்சிக்கு வந்தால் 5 லட்சத்து 50 ஆயிரம் அரசு ஊழியர்களை நாங்கள் நியமனம் செய்வோம் என முதலமைச்சர் கூறினார். ஆனால் செய்தது வெறும் 68 ஆயிரம் அதிலும் 32 ஆயிரம் தற்காலிக பணியாளர்கள். தமிழக அரசு சொல்வது ஒன்று, செய்வது ஒன்றாக உள்ளது. தெரு தெருவாக தமிழ்நாட்டில் கஞ்சா விற்றுக் கொண்டு இருக்கிறார்கள். அமெரிக்காவில் கிடைக்கும் அனைத்து போதை பொருட்களும் எல்லா இடங்களிலும் கிடைக்கிறது. தமிழக முதலமைச்சர் இதைக் கண்டுகொள்வதில்லை. தமிழ்நாட்டில் மக்கள் விரோத ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதலமைச்சர் சட்டம் ஒழுங்கை கையில் எடுக்க வேண்டும். திமுக கொடுத்த 550 வாக்குறுதிகளில் 45 வாக்குறுதிகள் தான் நிறைவேற்றி உள்ளது. தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. அனைத்து துறைகளிலும் பற்றாக்குறை உள்ளது. இந்தியாவில் 8 மாநிலங்களில் பழைய ஓய்வூதியம் கொடுப்போம் என்று அறிவித்து கொடுத்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் ஏன் கொடுக்க முடியவில்லை?

மழை வரும் சமயத்தில் மழைநீர் வெளியேற தேவையான அடிப்படை கட்டமைப்பை உருவாக்குவதை விட்டுவிட்டு,அமைச்சர்களும் அதிகாரிகளுடன் படகை தேடுகின்றனர். இதுதான் திராவிட மாடல் அரசா? ஏரிகள்,ஆறுகள் தூர்வார நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால் தூர் வாரும் பணிகள் நடைபெறுவதில்லை. கொள்ளை தான் அடிக்கின்றனர். 2026 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி நடைபெறும்; அதில் பாமக இடம்பெறும்”எனத் தெரிவித்துள்ளார்.

tngovt pmk anbumani
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe