anbumani ramadoss

புவி வெப்பமடைதலால் ஏற்படும் பேராபத்தை தடுக்கும் வகையில் காலநிலை அவசரநிலையை அறிவிக்க வலியுறுத்தி பசுமை தாயகம் அமைப்பு சார்பில் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மீனாட்சி மகளிர் கல்லூரியில் விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சி நடந்தது. விழாக்கிழமை நடந்த இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர்,

Advertisment

வல்லுனர்கள் குழு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி 2050-ம் ஆண்டுக்குள் கடல் நீர்மட்டம் 7½ மீட்டர் உயரும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அப்படி என்றால் சென்னை, கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட நகரங்கள் அழிந்தே போய்விடும். கோடம்பாக்கம் கடற்கரையாக மாறிவிடும்.

Advertisment

இந்த அபாயம் தடுக்கப்பட வேண்டும் என்றால் மத்திய அரசு உடனடியாக காலநிலை அவசரநிலை பிரகடனத்தை அமல்படுத்த வேண்டும். அயர்லாந்து, இங்கிலாந்து. பிரான்ஸ், கனடா போன்ற நாடுகளிலும், பாரிஸ், நியூயார்க் உள்ளிட்ட நகரங்களில் இந்த காலநிலை அவசரநிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. எனவே இந்தியாவிலும் இந்த நடவடிக்கை அமலாக வேண்டும். தமிழகம் உள்ளிட்ட எல்லா மாநிலங்களிலும் இது அறிவிக்கப்பட வேண்டும்.

இதற்கு மாணவ சமுதாயத்தின் கடமை பெரியளவில் இருக்கிறது. காலநிலை அவசரநிலை பிரசாரத்தில் மாணவ சமுதாயம் முழுமூச்சாக ஈடுபட வேண்டும். எதிர்கால பிரச்சனைக்கு தீர்வுகாண இன்றே மாணவ சமுதாயம் விழித்துக்கொள்ள வேண்டும் என்றார்.