Advertisment

முதல்கட்டமாக ரூ. 3 கோடி நிதியுதவி! அன்புமணி ராமதாஸ்

கொரோனா தடுப்பு பணி, மருத்துவக் கருவிகள் வாங்க முதல்கட்டமாக ரூ. 3 கோடி நிதியுதவி அளிப்பதாக பாமக இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் என்ற கொடிய நோய் தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் வேகமாகப் பரவி வரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகள் கடுமையாகப் போராடி வருகின்றன. இதற்காக மத்திய அரசு ரூ.15,000 கோடியும், மாநில அரசுகள் பல்லாயிரம் கோடியும் நிதி ஒதுக்கியுள்ள போதிலும், கொரோனா வைரஸ் நோயின் புதிய பரிமாணம் காரணமாகவும், பிற நோய்களைத் தடுக்கும் முறைகளில் இருந்து இந்நோயைச் சோதித்து, தடுக்கும் முறை மாறுபட்டது என்பதாலும், அது போதுமானதல்ல.

Advertisment

anbumani ramadoss

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

காரோனா வைரசால் எவரேனும் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா? என்பதைக் கண்டறிவதற்கான தெர்மல் ஸ்கேனர்கள், நோய்த்தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கான பாதுகாப்பு கவச கருவிகள், கொரோனா சோதனைக் கருவிகள், செயற்கை சுவாசக் கருவிகள் (Ventilators) முகக் கவசங்கள், கையுறைகள், கிருமி நீக்கும் மருந்துகள் மற்றும் கொரோனா நோயைக் கட்டுப்படுத்தத் தேவைப்படும் பிற கருவிகளை வாங்க தமிழ்நாடு அரசுக்கு பெருந்தொகை தேவைப்படுகிறது.

தமிழக அரசின் நோய்த்தடுப்பு பணிகளுக்கு உதவும் வகையில் மருத்துவக் கருவிகளை வாங்குவதற்காக எனது நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி நிதியிலிருந்து முதல்கட்டமாக ரூ.3 கோடி வழங்க ஒப்புதல் அளித்துள்ளேன். தேவையைப் பொறுத்து அடுத்தடுத்த கட்டங்களில் கூடுதல் நிதி ஒதுக்கத் தயாராக உள்ளேன். இவ்வாறு கூறியுள்ளார்.

anbumani ramadoss corona virus Financial help
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe