முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று காலை பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்தார்.

Advertisment

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, அதிமுக அரசிடம் அளித்துள்ள 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி வலியுறுத்தினோம். பேரறிவாளன் உட்பட 7 பேரும் நிச்சயம் விடுதலை ஆவார்கள் என நம்பிக்கை உள்ளது. இன்னும் 2 ஆண்டுகளுக்குள் பூரண மதுவிலக்கு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தினோம். எங்களது கோரிக்கைகளை பரிசீலனை செய்வதாக முதல்வர் கூறினார்.

Advertisment

Anbumani Ramadoss

மக்களவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக கூட்டணி கட்சிகள் ஒன்று சேர்ந்து முடிவு செய்யப்படும். அதன் அறிவிப்பு அதிகாரபூர்வமாக விரைவில் தெரிவிக்கப்படும். அதிமுக கூட்டணிக்கு தேமுதிக வர வேண்டும் என்று பா.ம.க விரும்புகிறது என்றும் தங்கள் கூட்டணிக்கு தேமுதிக வருவதை வரவேற்கிறோம் எனவும் கூறியுள்ளார்.